Published : 28 Jan 2021 08:58 PM
Last Updated : 28 Jan 2021 08:58 PM
தை வெள்ளிக்கிழமை சுக்கிர வாரத்தில் மகாலக்ஷ்மியை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள். இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கித் தருவாள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று வேண்டுவதும் வழிபடுவதும் புற்றுக்குப் பால் வார்த்து வேண்டிக்கொள்வதும் தோஷங்களையெல்லாம் போக்கும். காலசர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சக்தி வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். பொதுவாகவே செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், காலையும் மாலையும் அம்பாளுக்கு பூஜைகள் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது.
அதிலும் தை மாத வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் அம்பிகையை ஆராதிப்பதும் வணங்குவதும் பிரார்த்தனை செய்வதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இந்தநாளில், மகாலக்ஷ்மியை வணங்கினால், மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
இந்தநாளில், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யலாம். அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். அதேபோல், அபிராமி அந்தாதி படிப்பதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் நல்ல அதிர்வுகளை இல்லத்தில் வியாபிக்கச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை மனமுருக தரிசிப்போம். உள்ளமுருக பிரார்த்தனைகளை வைப்போம். சிவாலயத்தில் உள்ள அம்பாளையும் கோஷ்டத்தில் உள்ள துர்கையையும் நெய்தீபமேற்றி வேண்டுவோம். வேண்டியதெல்லாம் தந்தருளுவார் அம்பாள்.
அதேபோல், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று வேண்டுவதும் வழிபடுவதும் புற்றுக்குப் பால் வார்த்து வேண்டிக்கொள்வதும் தோஷங்களையெல்லாம் போக்கும். காலசர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT