Published : 22 Oct 2015 11:59 AM
Last Updated : 22 Oct 2015 11:59 AM
இஞ்சிமேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீபரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆராதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராமர் மூல விக்கிரகம் கொண்ட திருக்கோயில் இது. வரதன், ஸ்ரீலட்சுமி நரசிம்மன் மற்றும் பெருந்தேவித் தாயார் சந்நிதி உட்பட பல பிரதான தெய்வங்களின் சந்நிதிகள் கொண்ட இத்திருக்கோயிலுக்கு ஐம்பத்தைந்து அடி உயர நூதன ராஜ கோபுரம் அமைக்கத் திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
***
வடஇலுப்பை ஸ்ரீமருந்தீஸ்வரர் திருக்கோயில்
பாலாறு நதிக்கரையில் உள்ள வட இலுப்பையில் கோயில் கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இத்திருக் கோயிலில் சுவர்ண ஆகர்ஷண பைரவர் உட்பட அனைத்து சந்நிதிகளுக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
***
திருத்தம்
ஆனந்த ஜோதியில் கடந்த வாரம் வெளிவந்த, ‘நாமே சிவமாவது எப்படி? என்ற கட்டுரையில் பத்திரகிரியாரின் பாடலை, `அப்பிட்ட வேணியனுக்கு’ என்று திருத்தி வாசிக்கவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT