Published : 21 Jan 2021 10:57 PM
Last Updated : 21 Jan 2021 10:57 PM
தை வெள்ளிக்கிழமையில் ராகுகாலத்தில் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவோம். எலுமிச்சை தீபமேற்றுவோம். கவலைகளும் கஷ்டங்களும் பனி போல் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். நாளைய தினம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை, தை மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை. இந்தநாளில், துர்கைக்கு ராகுகால வேளையில் விளக்கேற்றி வழிபடுங்கள். துக்கம் போக்கி, இருளை விலக்கி ஒளிமயமான வாழ்வை வரமெனத் தந்திடுவாள் துர்காதேவி.
சக்தி என்று அம்பாளைச் சொல்லுவோம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்கிறது புராணம். உலகின் அத்தனை உயிர்களின் இயக்கங்களுக்கும் மூலாதாரமே சக்தி என்கிற பராசக்திதான். உலகுக்கே அம்மையாகத் திகழும் சக்திதேவியை வணங்கி வந்தால், நம் சங்கடங்கள் யாவும் தீரும். துக்கங்கள் அனைத்தும் விலகும். தோல்விகள் அனைத்தும் வெற்றியாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அம்பாளாகவும் அம்மனாகவும் தேவியாகவும் கருமாரியாகவும் வீற்றிருக்கிறாள். காமாட்சியாகவும் மீனாட்சியாகவும் அங்கயற்கண்ணியாகவும் முண்டகக்கண்ணியாகவும் முப்பாத்தம்மனாகவும் கொலுவிருக்கிறாள். முத்தாலம்மனாகவும் முத்துமாரியம்மனாகவும் கெளரியாகவும் கெளமாரியம்மனாகவும் காட்சி தருகிறாள்.
மாரியம்மனாக காட்சி தருகிறாள். செல்லியம்மனாகவும் இசக்கியம்மனாகவும் அற்புதம் நிகழ்த்துகிறாள். அம்பாளை பல்வேறு திருநாமங்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்.
சக்தி வழிபாட்டில் மிக மிக முக்கியமானவள் துர்காதேவி. எல்லா சிவாலயங்களிலும் துர்கைக்கும் சந்நிதி அமைந்திருக்கிறது. துர்கையை வழிபடுவது மகோன்னதமான பலன்களைத் தரும்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாட்கள். துர்கைக்கு செவ்வாய்க்கிழமையன்று ராகுகாலத்திலும் வெள்ளிக்கிழமையன்று ராகுகாலத்திலும் எலுமிச்சை தீபமோ நெய் தீபமோ ஏற்றி வணங்குவது மாங்கல்ய பலத்தைக் கொடுக்கும். மாங்கல்ய வரத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். நாளைய தினம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை, தை மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை. இந்தநாளில், துர்கைக்கு ராகுகால வேளையில் விளக்கேற்றி வழிபடுங்கள். துக்கம் போக்கி, இருளை விலக்கி ஒளிமயமான வாழ்வை வரமெனத் தந்திடுவாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT