Last Updated : 17 Jan, 2021 04:53 PM

 

Published : 17 Jan 2021 04:53 PM
Last Updated : 17 Jan 2021 04:53 PM

பஞ்சமியில் வாராஹிக்கு செவ்வரளி! 

பஞ்சமி திதியில் வாராஹிக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். வளமும் பலமும் தந்தருளுவாள் வாராஹி தேவி. இந்த நன்னாளில், வாராஹி தேவியை தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வாராஹிதேவியின் மூலமந்திரத்தைச் சொல்லி உங்கள் வேண்டுதல்களை அவளிடம் முறையிடுங்கள்.

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வத்துக்கு உகந்தவை என்று சொல்லப்பட்டிருக்கின்றன. ஏகாதசி திதியில் பெருமாள் வழிபாடு மற்றும் விரதம் விசேஷமானது. ஏகாதசி மட்டுமின்றி துவாதசி திதியும் பெருமாளுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

சதுர்த்தி விநாயகப் பெருமானுக்கும் சஷ்டி முருகப்பெருமானுக்கும் உரிய மிக முக்கியமான நாட்கள். அஷ்டமி திதியானது பைரவருக்கு உரிய நாள். இந்தநாளில், பைரவரை தரிசித்து அவருக்கு வடைமாலை அல்லது செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.

திரயோதசி திதி என்பது பிரதோஷ வழிபாட்டுக்கான நாள். சிவ வழிபாட்டுக்கான நாள். சிவ பூஜைகள் செய்வதற்கு உரியநாள். இந்த நாளில், சிவாலயங்களில் நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

இதேபோல், பஞ்சமி திதி என்பது வாராஹி தேவிக்கான நாள். சக்தியரில் ஒருவரான வாராஹியை வணங்கி வழிபடுவதற்கான அற்புதமான நாள்.
சப்தமாதர்களில் வாராஹியும் ஒருத்தி. சொல்லப்போனால், சப்தமாதர்களில், மிக வலிமையும் சக்தியும் அழிக்கும் வல்லமையும் காக்கும் வீரியமும் கொண்டவள் வாராஹி தேவி என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சப்தமாதர்களின் தலைவி என்று வாராஹி தேவியைச் சொல்லுவார்கள்.

பஞ்சமி திதி வாராஹி தேவிக்கு உகந்தது. அதிலும் வளர்பிறை பஞ்சமி திதி மிகவும் சிறப்புக்கு உரியது. இன்று 17ம் தேதி வளர்பிறை பஞ்சமி.

இந்த நன்னாளில், வாராஹி தேவியை தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வாராஹிதேவியின் மூலமந்திரத்தைச் சொல்லி உங்கள் வேண்டுதல்களை அவளிடம் முறையிடுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.

எதிர்ப்புகளையும் தீயசக்திகளையும் விரட்டுவாள் வாராஹி தேவி. இன்னல்களையெல்லாம் போக்குவாள். கேட்டதையெல்லாம் தந்தருள்வாள் தேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x