

மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி ஸ்லோகம் சொல்லுவோம். பால் பாயசம் நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதார வேண்டிக் கொள்வோம். பால் பாயச நைவேத்தியம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வோம். சகல சுபிட்சங்களையும் தந்தருளுவாள் தாயார்.
வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். மகாலக்ஷ்மியின் ஆதிக்கம் நிறைந்தவர் சுக்கிர பகவான். நல்ல உத்தியோகம், அற்புதமான குடும்பம், வீடு வாசல் என்றிருப்பவர்களை ‘அவனுக்கு சுக்கிர யோகம் அடிச்சிருச்சுய்யா’ என்று சொல்வோம்.
இப்படி, வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என்று எல்லாமே நல்லவிதமாக அமைவதற்கு, மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் மகாலக்ஷ்மியைத் துதிப்போம்.
முன்னதாக, வீட்டைச் சுத்தமாக்குவோம். பூஜையறையை சுத்தம் செய்வோம். மகாலக்ஷ்மியின் படத்தை சுத்தப்படுத்துவோம். சந்தனம் குங்குமம் இடுவோம். செந்நிற மலர்கள், வெண்மை நிற மலர்கள் சூட்டுவோம். தாமரை கிடைத்தால் தாயாருக்கு சமர்ப்பியுங்கள்.
நாளைய தினம் மார்கழி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. இந்தநாளில்....
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
செளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா.
இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவோம்.
பால் பாயச நைவேத்தியம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வோம். சகல சுபிட்சங்களையும் தந்தருளுவாள் தாயார்.