Published : 04 Jan 2021 07:28 PM
Last Updated : 04 Jan 2021 07:28 PM
ஸ்ரீராமஜெயம் என்று 108 முறை எழுதி, அதை மாலையாக்கி அருகில் உள்ள அனுமனுக்கு மாலையாக அணிவித்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் அனுமன். ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி பிரார்த்தனை செய்யச் செய்ய, நம் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தமிழகத்தில் சைவ, வைணவக் கோயில்கள் என பல உண்டு. சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், அம்மன் ஆலயங்கள், விநாயகப் பெருமானுக்கு உண்டான திருத்தலங்கள், முருகக் கடவுளின் திருத்தலங்கள், ஹயக்ரீவர் திருத்தலங்கள், நரசிம்மர் திருத்தலங்கள், ஸ்ரீவராக மூர்த்தி திருத்தலங்கள் என்று பல ஆலயங்கள் இருக்கின்றன.
இவற்றில் பல திருத்தலங்கள், அந்த ஊருக்கே பெருமை சேர்க்கும் வகையில் புராண - புராதனப் பெருமைகளுடன் திகழ்கின்றன. சக்தியும் சாந்நித்தியம் கொண்ட திருத்தலங்கள் என்று போற்றப்படுகின்றன.
தமிழகத்தில் அம்மன் வழிபாடுகளும் முருக வழிபாடுகளும் அதிகமாக இருக்கின்றன. எனவே அம்மன் கோயில்கள் தமிழகத்தில் பெருகியுள்ளன. குறிப்பாக, மாரியம்மன் எனும் திருநாமத்துடன் உள்ள அம்மன் கோயில்கள் இங்கே அதிகம்.
இப்படியான ஆலயங்களில் அனுமனுக்கான கோயில்களும் சந்நிதிகளும் அதிகமாகவே உள்ளன. தமிழகத்தின் பல ஊர்களிலும் ஆஞ்சநேயருக்கு கோயில்கள் உள்ளன. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், உலகப் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்கிறது.
ஒவ்வொரு ஊரிலும் சிறிதும் பெரிதுமாக இருக்கும் அனுமன் கோயில்கள், சக்தி வாய்ந்த திருத்தலங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.
ராம பக்தன் என்று தன்னை அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைபவர் அனுமன். ‘ஸ்ரீராம ஜெயம்’ என்று நாம் எழுதி பிரார்த்தித்தால், ராமபிரானை ஆயிரம் மடங்கு குளிர்ந்து மகிழ்கிறார் அனுமன் என சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்று 108 முறை எழுதி ராமபிரானையும் அனுமனையும் மனதாரப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.
அதேபோல், ஸ்ரீராமஜெயம் என்று 108 முறை எழுதி, அதை மாலையாக்கி அருகில் உள்ள அனுமனுக்கு மாலையாக அணிவித்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் அனுமன். ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி பிரார்த்தனை செய்யச் செய்ய, நம் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
’ஸ்ரீராம ஜெயம்’ எழுதி அனுமனுக்கு மாலையாக அணிவித்து வேண்டிக்கொள்ளுங்கள். புண்ணியங்கள் பெருகும். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் ஜெய் அனுமன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT