Published : 04 Jan 2021 03:32 PM
Last Updated : 04 Jan 2021 03:32 PM
பழநி மலைக்கு எப்போது சென்றாலும் எந்தத் தருணத்தில் சென்றாலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகித்த நீரையோ பாலையோ கொஞ்சம் அருந்துங்கள். பழநி வாழ் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் பிரசாதத்தை, தீர்த்தப் பிரசாதத்தை அருந்துங்கள். தீராத நோய் அனைத்தும் தீர்த்து வைப்பார் முருகக் கடவுள். சகல தோஷங்களையும் போக்கி அருளுவார் பாலதண்டாயுதபாணி.
முருகப்பெருமான் என்றதும் ஆறுபடைவீடு நினைவுக்கு வரும். ஆறுபடை வீடு என்றதும் பழநி மலை நினைவுக்கு வரும். பழநிமலை என்றதும் ஸ்ரீதண்டாயுதபாணி நினைவுக்கு வருவார். தண்டாயுதபாணி சுவாமியை நினைக்கும்போதே போகர் சித்தரும் நினைவுக்கு வருவார்.
போகர் எனும் சித்தபுருஷரின் மகிமைகள் ஏராளம். தனக்குத் தெரிந்த யோகக் கலைகளைக் கொண்டு மூலிகைகளை சேகரித்தார். மொத்தம் 4,448 மூலிகைகள் கொண்டு, 81 பாஷாணங்களாக மாற்றினார். அப்படியான 81 பாஷாணங்களையும் ஒன்பது பாஷாணங்களாகப் பிரித்துக்கொண்டார். இந்த ஒன்பது பாஷாணங்களையும் மருந்தாக மாற்றினர். இப்படியான பாஷாணங்களைக் கொண்டு மனிதர்களுக்கு இறப்பே நிகழாத மருந்தை உண்டுபண்ணினார். அதுமட்டுமா? இந்த பாஷாணத்தைக் கொண்டுதான் முருகப்பெருமான்ன் விக்கிரகத்தை உண்டுபண்ணினார் என்கிறது பழநி முருகன் கோயிலின் ஸ்தல புராணம்.
பழநி மலையின் மீது குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தன் அருளால் மட்டுமல்ல தன் உருவாலும் அளப்பரிய சக்தியைக் கொண்டிருக்கிறார். பழநியம்பதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகிக்கப்படும் நீரைப் பருகுவதோ பாலபிஷேகம் செய்த பாலைப் பருகுவதோ தீராத நீண்டகால நோயையெல்லாம் தீர்த்துவைக்கும் என்று தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
ஆறுபடைவீடுகளில் ஓங்கி உயர்த மலையின் மீது குடிகொண்டிருக்கும் பழநியம்பதி அற்புதமான திருத்தலம். ஆறுபடை வீடுகளில், இந்தத் தலத்துக்குத்தான் தைப்பூசத் திருநாளையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். பல கோயில்களுக்கும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தாலும் இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல், காவடி எடுத்து வரும் அன்பர்களும் பால் குடம் எடுத்து வரும் அன்பர்களும் ஆயிரக்கணக்கான அளவில் இருக்கும்.
பழநி மலைக்கு எப்போது சென்றாலும் எந்தத் தருணத்தில் சென்றாலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகித்த நீரையோ பாலையோ கொஞ்சம் அருந்துங்கள். பழநி வாழ் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் பிரசாதத்தை, தீர்த்தப் பிரசாதத்தை அருந்துங்கள். தீராத நோய் அனைத்தும் தீர்த்து வைப்பார் முருகக் கடவுள். சகல தோஷங்களையும் போக்கி அருளுவார் பாலதண்டாயுதபாணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT