Published : 18 Dec 2020 01:40 PM
Last Updated : 18 Dec 2020 01:40 PM
மார்கழி மாதத்தின் திருவோண நட்சத்திர நாளில், பெருமாளை தரிசனம் செய்வோம். வேங்கடவனை வேண்டி வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் விலகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
கேட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர் மகாவிஷ்ணு. இவரை எப்போது வணங்கினாலும் எப்போதும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழலாம் என்பது ஐதீகம்.
சதுர்த்தி திதி என்பது பிள்ளையாருக்கு உகந்த நாளாக போற்றப்படுகிறது. சஷ்டி திதி என்பது முருகப்பெருமானுக்கு உகந்தநாளாக வழிபடப்படுகிறது. பஞ்சமி திதி வாராஹி வழிபாட்டுக்கு உகந்ததாக சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
அதேபோல் திரயோதசி திதி என்பது பிரதோஷமாக, பிரதோஷ வழிபாடாக சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக, உன்னதமான நாளாக பிரதோஷ பூஜை திகழ்கிறது.
இதேபோல், திருவோணம் நட்சத்திர நாள், மகாவிஷ்ணுவுக்கு உரிய நாளாக, பெருமாளுக்கு உரிய நாளாக, ஏழுமலையானுக்கு உரிய நாளாக, வேங்கடவனுக்கு உரிய நாளாக, திருமாலுக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது.
திருவோண நட்சத்திர நாளில், பெருமாளுக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் அனைத்தையும் தந்தருளுவது திருவோண வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பொதுவாகவே திருவோண நட்சத்திரம், எந்த மாதத்தில் வந்தாலும் சிறப்பானதுதான். வழிபாட்டுக்கு உரியதுதான். அதேசமயம், மார்கழி மாதத்தில் வருகிற திருவோண நட்சத்திரம் இன்னும் சிறப்பு வாய்ந்தது. மகத்துவம் மிக்கது. மகோன்னதமானது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று மார்கழி மாதத்தின் திருவோண நட்சத்திரம். அற்புதமான நாள். மேலும் மகாலக்ஷ்மிக்கு உரிய, அம்பாளுக்கு உரிய, சக்தி தேவிக்கு உரிய நாள். சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை, இன்னும் மகிமை மிக்கது. இன்று 18ம் தேதி மார்கழி திருவோணம். சுக்கிர வார திருவோணம்.
இந்த நன்னாளில், மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளை, மார்கழியில்... சுக்கிர வாரத்தில்.... வெள்ளிக்கிழமையில்... திருவோண நட்சத்திர நாளில் மனதார வழிபடுங்கள். கஷ்டங்களில் இருந்து நம்மை மீட்டெடுப்பார் வேங்கடவன். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க அருளுவார் ஏழுமலையான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT