Last Updated : 15 Dec, 2020 11:47 AM

 

Published : 15 Dec 2020 11:47 AM
Last Updated : 15 Dec 2020 11:47 AM

கார்த்திகை செவ்வாய்; ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள்! 

கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையில், ராகுகாலத்தில் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். தீய சக்திகளையெல்லாம் அழித்தொழித்து அரவணைத்துக் காத்தருள்வாள் துர்காதேவி.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகாலவேளையில் துர்காதேவிக்கு விளக்கேற்றுவதும் வழிபடுவதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சிவாலயங்களிலும் மற்ற கோயில்களிலும் கோஷ்டப் பகுதியில், துர்கா தேவிக்கு சந்நிதி அமைந்திருக்கும். இந்த நாட்களிலும் ராகு கால வேளையிலும், துர்கையின் சந்நிதிக்கு விளக்கேற்றுவார்கள் பக்தர்கள். அகல்விளக்கில் எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவார்கள். அதேபோல, எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபடுவதும் நடைபெறும்.
துர்கை என்றாலே துக்கங்களைத் தீர்ப்பவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்கைக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்குவது சிறப்பு. எலுமிச்சை தீபமேற்றி வணங்கி வருவது இன்னும் வளம் சேர்க்கும்.

செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 வரை ராகுகாலம். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இன்று செவ்வாய்க்கிழமை. கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, ராகுகாலவேளையில், துர்கைக்கு விளக்கேற்றுங்கள்.

அதேபோல், வீட்டில், பூஜையறையில் விளக்கேற்றுங்கள். துர்காஷ்டகம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். ராகுகாலத்தில் வீட்டில் விளக்கெரிவது, எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ராகுகாலத்தில் வீட்டில் விளக்கேற்றுவதால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் அனைத்தும் தூர ஓடிவிடும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், ராகு கால வேளையில் துர்கைக்கு தீபமேற்றுவோம். எலுமிச்சை தீபமேற்றுவோம். இல்லத்தில் விளக்கேற்றுவோம். துஷ்ட சக்தியில் இருந்து விலகுவோம். காரியங்கள் அனைத்தையும் வீரியமாக்கித் தருவாள் துர்கை. கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிக் காப்பாள் துர்காதேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x