Published : 15 Dec 2020 10:25 AM
Last Updated : 15 Dec 2020 10:25 AM
அற்புதமான மார்கழி மாதம் நாளைய தினம் 17ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. மார்கழிப் பிறப்பில், ஒவ்வொரு நாளும் மகாவிஷ்ணுவை வழிபடுவோம். சிவனாரை தரிசித்துப் பிரார்த்திப்போம். பெருமாளுக்கு திருப்பாவை பாடுவது விசேஷம் எனில், சிவனாருக்கு திருவெம்பாவை பாடுவது சிறப்பு. ஆகவே, தினமும் திருப்பாவை பாடுங்கள். திருவெம்பாவை பாடுங்கள். சிவனாரையும் விஷ்ணுவையும் மனதார வேண்டுங்கள்.
மார்கழி மாதம் என்பது தபஸ் செய்வதற்கு ஏற்ற காலம். மார்கழி என்பது புதிதாகக் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு தொடங்குகிற காலம். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கும் பூஜைகளுக்கும் உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் நம் மனதைச் செலுத்துவது நம் அடுத்தடுத்த வாழ்க்கையை இனிமையாகவும் அமைதியாகவும் செலுத்துவதற்கு இறை சக்தி துணை நிற்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி திருமாலை தினமும் வணங்குவது மங்கல காரியங்களை நடத்தித் தரும். மங்காத செல்வத்தைத் தந்தருளும் என்பது உறுதி. அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
அதேபோல் மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளோ இரண்டு நாளோ... நம்மால் முடிந்த அளவு கோயில் நைவேத்தியத்துக்கு சர்க்கரைப் பொங்கலோ, புளியோதரையோ, வெண் பொங்கலோ நைவேத்தியம் செய்து வழிபடுவது காரியத் தடைகள் அனைத்தையும் தகர்த்துவிடும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.
சிவனாரை மார்கழியில் வழிபாடு செய்வதும் விசேஷம்... மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என அருளியுள்ளார் கிருஷ்ண பரமாத்மா. எனவே மகாவிஷ்ணுவை வழிபடுவதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும்.
பெருமாளுக்கு திருப்பாவை பாடுவது விசேஷம் எனில், சிவனாருக்கு திருவெம்பாவை பாடுவது சிறப்பு. ஆகவே, தினமும் திருப்பாவை பாடுங்கள். திருவெம்பாவை பாடுங்கள். சிவனாரையும் விஷ்ணுவையும் மனதார வேண்டுங்கள்.
மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். மங்காத செல்வமும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT