Last Updated : 07 Dec, 2020 05:16 PM

 

Published : 07 Dec 2020 05:16 PM
Last Updated : 07 Dec 2020 05:16 PM

பைரவா சரணம்; பைரவா போற்றி! பைரவாஷ்டமி போற்றி! 

கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். பைரவர் வழிபாடு மிக மிக வலிமை வாய்ந்தது. அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கிறது. பைரவர்தான் ஆலயங்களைக் காக்கும் தெய்வம் என்கிறது புராணம்.

64 பைரவர்களின் திருநாமங்கள் :

1. நீலகண்ட பைரவர் , 2. விசாலாக்ஷ பைரவர், 3. மார்த்தாண்ட பைரவர், 4. முண்டனப்பிரபு பைரவர், 5. ஸ்வஸ்சந்த பைரவர், 6. அதிசந்துஷ்ட பைரவர், 7. கேர பைரவர், 8. ஸம்ஹார பைரவர், 9. விஸ்வரூப பைரவர், 10. நானாரூப பைரவர்,

11. பரம பைரவர், 12. தண்டகர்ண பைரவர், 13. ஸ்தாபாத்ர பைரவர், 14. சீரீட பைரவர், 15. உன்மத்த பைரவர், 16. மேகநாத பைரவர், 17. மனோவேக பைரவர் 18. க்ஷத்ர பாலக பைரவர், 19. விருபாக்ஷ பைரவர், 20. கராள பைரவர்,

21. நிர்பய பைரவர், 22. ஆகர்ஷண பைரவர், 23. ப்ரேக்ஷத பைரவர், 24. லோகபால பைரவர், 25. கதாதர பைரவர், 26. வஞ்ரஹஸ்த பைரவர், 27. மகாகால பைரவர், 28. பிரகண்ட பைரவர், 29. ப்ரளய பைரவர், 30. அந்தக பைரவர்,

31. பூமிகர்ப்ப பைரவர், 32. பீஷ்ண பைரவர், 33. ஸம்ஹார பைரவர், 34. குலபால பைரவர், 35. ருண்டமாலா பைரவர், 36. ரத்தாங்க பைரவர், 37. பிங்களேஷ்ண பைரவர், 38. அப்ரரூப பைரவர், 39. தாரபாலன பைரவர், 40. ப்ரஜா பாலன பைரவர்,

41. குல பைரவர், 42. மந்திர நாயக பைரவர், 43. ருத்ர பைரவர், 44. பிதாமஹ பைரவர், 45. விஷ்ணு பைரவர், 46. வடுகநாத பைரவர், 47. கபால பைரவர், 48. பூதவேதாள பைரவர், 49. த்ரிநேத்ர பைரவர், 50. திரிபுராந்தக பைரவர்,

51. வரத பைரவர், 52. பர்வத வாகன பைரவர், 53. சசிவாகன பைரவர், 54. கபால பூஷண பைரவர், 55. ஸர்வவேத பைரவர், 56. ஈசான பைரவர், 57. ஸர்வபூத பைரவர், 58. ஸர்வபூத பைரவர், 59. கோரநாத பைரவர், 60. பயங்க பைரவர்,

61. புத்திமுக்தி பயப்த பைரவர், 62. காலாக்னி பைரவர், 63. மகாரௌத்ர பைரவர், 64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்.

சிவபெருமானின் பஞ்சகுமாரர்கள் என்று கணபதி, முருகப்பெருமான், வீரபத்திரர், ஐயனார், பைரவர் எனத் தெரிவிக்கிறது புராணம்.

துக்கத்தையும் துக்கத்திற்கு அடிப்படையான பாவத்தையும் சிவபெருமானைப் போலவே போக்குபவர் பைரவர். அவருடைய சக்தியான காளியும் பைரவி என்ற பெயரில் ஈசானத் திக்கில் இருந்து கொண்டு காவல் காக்கிறாள் என்பது ஐதீகம். .

பைரவரை வலிமைமிக்க ஞானமூர்த்தியாக உற்பத்தி செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அவரிடம் சிவபெருமான் அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து அருளுகிறார் என்கிறது புராணம்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குங்கள். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, மகாதேவாஷ்டமி என்பார்கள். பைரவாஷ்டமி என்றும் போற்றுவார்கள். இன்று 7ம் தேதி பைரவாஷ்டமி. பைரவரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல தோஷங்களையும் எதிர்ப்புகளையும் போக்கி அருளுவார் காலபைரவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x