Published : 24 Nov 2020 04:27 PM
Last Updated : 24 Nov 2020 04:27 PM
ஸ்ரீராமரின் காயத்ரியை தினமும் சொல்லுங்கள். குடும்பத்திலும் சகோதரர்கள் வகையிலும் ஒற்றுமை நீடிக்கும். ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து இனிதே வாழச் செய்வார் ராமபிரான்!
பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு விதமான நெறியை உணர்த்துகின்றன. மனித வாழ்வில் நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்ற மிக முக்கியமான அவதாரம் ஸ்ரீராமாவதாரம்.
’ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்’ என்பதை வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து, நமக்கெல்லாம் உணர்த்தியவர் ஸ்ரீராமபிரான். அதனால்தான் ராமாவதாரமும் ராமாயணமும் போற்றி கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது இன்றைக்கும்!
ஸ்ரீராமருக்கு, தமிழகத்தில் அரிதாகவே ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர், வடுவூர் கோதண்டராமர், திருநின்றவூர் ராமர் என சில ஆலயங்கள் மட்டுமே இருக்கின்றன. மன்னார்குடிக்கு அருகில் உள்ளது வடுவூர். திருவள்ளூருக்கு அருகில் உள்ளது திருநின்றவூர் திருத்தலம். செங்கல்பட்டு அருகில் அமைந்திருக்கிறது மதுராந்தகம்.
அதேபோல் தஞ்சையில் புன்னைநல்லூரில் மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குப் பின்னே இன்னொரு ஆலயம் அமைந்திருக்கிறது. இது ராமர் கோயில். கோதண்டராமர் கோயில்.
ஸ்ரீராமர் வழிபாடு உன்னதமான பலன்களை வழங்கக் கூடியது. ராமபிரானை வழிபட்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் ராம நாமம் சொல்லி ஜபிப்பதும் ஸ்ரீராமஜெயம் எழுதி வேண்டிக்கொள்வதும் இழந்த பதவியைத் தரும். இழந்த செல்வத்தைக் கொடுக்கும்.
ஸ்ரீராம ஜெயம் எழுதி, ராமநாமம் சொல்லி, ஸ்ரீராமபிரானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள். இழந்த நிம்மதியைப் பெறுவார்கள்.
ஸ்ரீராமபிரான் காயத்ரி :
ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்
ஸ்ரீராமரின் காயத்ரியை தினமும் சொல்லுங்கள். குடும்பத்திலும் சகோதரர்கள் வகையிலும் ஒற்றுமை நீடிக்கும். இல்லத்தில் ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து இனிதே வாழச் செய்வார் ராமபிரான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT