Published : 02 Nov 2020 03:52 PM
Last Updated : 02 Nov 2020 03:52 PM
அங்காரகனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணத் தடைகள் விலகும். விரைவில் திருமண யோகம் கைகூடும். வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை வழிபடுங்கள். அல்லகளை நீக்குவார். செவ்வாய் தோஷத்தைப் போக்குவார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் வைத்தீஸ்வரன் கோவில்.
தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட ஆலயம் இது. இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் வைத்தீஸ்வரன் கோயில். அம்பாளின் திருநாமம் ஸ்ரீதையல்நாயகி. இந்தத் திருக்கோயிலில், ஸ்ரீவள்ளி தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசிக்க வருகின்றனர். அற்புதமான வரங்களைத் தந்தருளும் திருத்தலம் இது. .
செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். இங்கே அமைந்துள்ள அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதர் முதலானோரை வழிபட்டு, ஆலமரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
பின்பு மூலவர் சந்நிதியை நோக்கி வந்து மூலவர்களை வணங்கவேண்டும். இங்கே அங்காரகன் சந்நிதி அமைந்துள்ளது. அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும். இதனால் தோஷம் நீங்கும். குறிப்பாக, செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணத் தடைகள் அகலும். கல்யாண வரம் கைகூடி வரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வரம் தரும் அங்காரக ஸ்தோத்திரம் :
பூமிபுத்ரோ மஹாதேஜா ஜகதாம் பயக்ருத்ஸதா
வ்ருஷ்டிக்ருத் வ்ருஷ்டி ஹாதாச பீடாம் ஹரதுமே குஜ;
இதை, தினமும் சொல்லி வந்தாலே தோஷங்கள் விலகிவிடும். செவ்வாய் பகவானின் பலத்தையும் அருளையும் பெற்றுவிடலாம். முக்கியமாக, செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனை, முருகப்பெருமானை, செவ்வாய் பகவானை மனதார வழிபட்டு வாருங்கள். விரைவில் கல்யாண வரன் தேடி வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT