Last Updated : 28 Oct, 2020 12:05 PM

1  

Published : 28 Oct 2020 12:05 PM
Last Updated : 28 Oct 2020 12:05 PM

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உப தலைவர் திவ்யானந்தர் மறைவு

சுவாமி திவ்யானந்தர்: கோப்புப்படம்

திருச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உப தலைவராக இருந்த சுவாமி திவ்யானந்தர் (86) நேற்று திருச்சியில் காலமானார்.

1971-ல் தபோவனத்தில் இணைந்த இவர், 1977-ல் தபோவனத்தின் நிறுவனரான சித்பவானந்தரிடம் சந்நியா தீட்சை பெற்று, திவ்யானந்தர் என்ற பெயரில் தனது பணியைத்தொடங்கினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கிளை நிறுவனங்களான திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பரத்வாஜா ஆசிரமம், ஸ்ரீ ராமகிருஷ்ண சிறுவர் காப்பகம் ஆகியவற்றின் பொறுப்பாளராக 32 ஆண்டுகள் பணியாற்றினார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, உடன்குடி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளிகளின் செயலாளராகவும் மற்றும் மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஆகியவற்றின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உப தலைவராகப் பணியாற்றி வந்த இவர், திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் உள்ள தபோவனத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யானந்தர் நேற்று (அக். 27) இரவு காலமானார்.

அதைத் தொடர்ந்து, அவரது உடல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன பள்ளி வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (அக். 28) பிற்பகல் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x