Published : 16 Oct 2020 07:32 PM
Last Updated : 16 Oct 2020 07:32 PM
நவராத்திரி என்பது எல்லோரும் கொண்டாட வேண்டிய அற்புதமான பண்டிகை. குறிப்பாக, பெண்கள் அவசியம் வணங்க வேண்டிய பண்டிகை இது. நவராத்திரியின் ஒன்பது நாளும் அம்பாளை ஆராதனை செய்யவேண்டும். ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான கோலங்களிட்டு, ஒவ்வொரு விதமான பாடல்களுடன் அம்பாளை ஆராதிக்க வேண்டும்.
அம்பாளை வணங்க வணங்க, இந்த ஒன்பது நாளுக்குப் பின்னர், இல்லத்தில் ஒரு சாந்நித்தியத்தை உணருவீர்கள். வீட்டில் தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்னென்ன கோலங்கள் இட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
• முதல் நாள் – அரிசி மாவு - பொட்டுக் கோலம்
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு - கட்டம் கொண்ட கோலம்
• மூன்றாம் நாள் –முத்துகள் போன்ற மலர்க்கோலம்
• நான்காம் நாள் – அட்சதைகளாலான படிக்கட்டுக் கோலம்
• ஐந்தாம் நாள் – கடலை கொண்டு பறவையினக் கோலம்
• ஆறாம் நாள் – பருப்பு கொண்டு தேவி நாமம் கொண்ட கோலம்
• ஏழாம் நாள் – திட்டாணி எனப்படும் வெள்ளை மலர்களால் ஆன கோலம்
• எட்டாம் நாள் – காசுகளாலான பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிடுவது விசேஷம்)
நவராத்திரியில் கொலு வைப்பவர்கள் என்றில்லாமல் எவர் வேண்டுமானாலும் இந்தக் கோலங்களை இடலாம். அம்பாளை வழிபடலாம்.
இதேபோல், ஒன்பது நாட்களும் அம்பாளைப் பாடல்கள் பாடி ஆராதிக்கலாம். அப்படிப் பாடல்கள் எந்த ராகத்தில் அமைந்திருப்பது சிறப்பு என்று விவரிக்கிறது.
• முதல்நாள் – தோடி ராகம்
• இரண்டாம் நாள் – கல்யாணி ராகம்
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை ராகங்கள்
• நான்காம் நாள் – பைரவி ராகம்
• ஐந்தாம் நாள் – பந்துவராளி ராகம்
• ஆறாம் நாள் – நீலாம்பரி ராகம்
• ஏழாம் நாள் – பிலஹரி ராகம்
• எட்டாம் நாள் – புன்னாகவராளி ராகம்
• ஒன்பதாம் நாள் – வஸந்தா ராகம்
இந்த ராகங்களில் அமைந்த அம்பாள் பாடல்களைப் பாடி வழிபடலாம். கொலு பொம்மைகளுக்கு எதிரே அமர்ந்துகொண்டு, இந்த ராகங்களில் அமைந்த பாடல்களைப் பாடுவது ரொம்பவே மகிமை மிக்கது.
அடுத்து, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு என்னென்ன மலர்கள் சூட்ட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது ஏதேனும் வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து
*************
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT