Last Updated : 29 Sep, 2020 01:05 PM

 

Published : 29 Sep 2020 01:05 PM
Last Updated : 29 Sep 2020 01:05 PM

ராகுகாலத்தில் கோயிலுக்கு செல்லுங்கள்; துக்கமெல்லாம் தீர்க்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபம்

ராகுகாலத்தில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கோ அம்மன் கோயிலுக்கோ செல்லுங்கள். செவ்வாய்க்கிழமையில் ராகுகாலத்தில் துர்கை சந்ந்தியில் அல்லது உக்கிரமான பெண் தெய்வத்தின் சந்நிதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். நம் துக்கத்தையெல்லாம் தீர்த்துவைப்பாள்.

நமக்கெல்லாம் சக்தியைக் கொடுப்பதே அம்பிகைதான். பெண் தெய்வ வழிபாட்டைச் செய்யச் செய்ய, நமக்கு சக்தி பிறக்கும். நம் வாழ்வில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். அம்பிகையை சக்தி என்று போற்றுகிறது புராணம். அம்பிகையை ஆராதித்து பூஜைகள் செய்து வழிபட்டால், தீயசக்திகளை நம் பக்கத்தில் அண்டவிடாமல் காத்தருள்வாள் தேவி.

அம்பாளை வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமை உகந்தநாள். அம்பாள் முதலான பெண் தெய்வங்களை, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது மகத்தான பலன்களை வழங்கக்கூடியது.

இந்தநாளில், வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி அம்பாளை வழிபடலாம். அதேபோல், மாலையில், சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர், 6 மணிக்கு மேல், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்துவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி அம்பாள் துதி பாராயணம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி ராகுகாலம். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த வேளைகளில், ராகுகாலத்தில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, துர்கைக்கு வாராஹிக்கு அல்லது பிரத்தியங்கிரா தேவிக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி பூஜிக்கலாம்.

சிவன் கோயிலிலும் அம்மன் கோயிலிலும் கோஷ்டத்தில் சந்நிதிகொண்டிருப்பாள் துர்கை. ராகுகாலத்தில் துர்கையின் சந்நிதியில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடலாம். அதேபோல், செல்லியம்மன், பிடாரியம்மன், கெளமாரியம்மன், மாரியம்மன், காளியம்மன், வீரமாகாளியம்மன் முதலான பெண் தெய்வங்களை வழிபடுங்கள்.
வீட்டில் இருந்துகொண்டு துர்கா ஸ்துதி பாராயணம் செய்யலாம். ப்ரத்தியங்கிரா தேவியை மனதாரப் பிரார்த்தித்து வேண்டிக்கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் உக்கிர தெய்வத்தை, பெண் தெய்வத்தை வழிபடுங்கள். தீயசக்திகள் அண்டாமல் காப்பாள் தேவி. துக்கத்தையெல்லாம் துடைத்தெறிவாள் துர்கை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x