Published : 18 Sep 2020 01:03 PM
Last Updated : 18 Sep 2020 01:03 PM
புரட்டாசி மாதத்தில், துளசியை வணங்குவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் விசேஷம். இதுவரை இல்லாவிட்டாலும் வீட்டில் துளசிச்செடி வைத்து, புரட்டாசி மாதத்தில் வளர்க்கத் தொடங்குங்கள். உங்கள் இல்லத்தில் அனைத்து சுபிட்சங்களையும் நிறைத்து அருள்பாலிப்பார்கள் மகாலக்ஷ்மியும் வேங்கடவனும்.
புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதம் என்பது வேங்கடவனுக்கு உரிய மாதம். புரட்டாசி என்பது விரதம் மேற்கொள்வதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் திருமாலை தரிசிப்பதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் நமக்குமான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் முடியும். காரியம் யாவும் வெற்றியைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
துளசி, பொதுவாகவே மணம் கமழக்கூடியதுதான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் இன்னும் மகிழ்வுடன் தன் நறுமணத்தைப் பரப்பும் என்பதாக ஐதீகம். இந்த மாதத்தில், தன் சக்தியையும் நறுமணத்தையும் வீரிய குணங்களையும் ஒருங்கே கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களையும் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி, அங்கிருந்தபடியே உலகையும் மக்களையும் ஆசீர்வதித்துக் காத்தருளும் மகாலக்ஷ்மி, துளசியில் வாசம் செய்கிறாள்.
இந்த மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தும் போது, தன் மணாளனனின் தோளில் சேரப்போகிறோம், அணிகலன் போல் நம்மை சார்த்தப் போகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து போகிறாளாம் மகாலக்ஷ்மி.
துளசியானது புனிதத் தன்மை வாய்ந்தது. மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடியது. பெருமாளுக்கு சார்த்தப்படும் முக்கிய பூ உள்ளிட்டவற்றில் துளசிக்கு மகத்தானதொரு இடமுண்டு. துளசிச் செடியை வளர்ப்பதும் துளசிச் செடியை சுற்றி வந்து ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகிறது புராணம்.
மேலும், இதுவரை வீட்டில் துளசிச்செடி இல்லாவிட்டாலும் கூட, வளர்க்காவிட்டாலும் கூட, புரட்டாசி மாதத்தில் துளசிச்செடியை வீட்டில் வளர்ப்பது சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.
துளசிச்செடி வளர்ப்பதால் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவும். ஆனந்தம் வழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT