Last Updated : 11 Sep, 2020 06:02 PM

 

Published : 11 Sep 2020 06:02 PM
Last Updated : 11 Sep 2020 06:02 PM

மகாவியதிபாதத்தில்... தானம் மகா புண்ணியம்; ஒரு குடையோ... வேஷ்டியோ வாங்கிக் கொடுங்களேன்! 

மகாளயபட்ச காலத்தில், மகாவியதிபாத நாளில், முன்னோரை நினைத்து யாருக்கேனும் ஒரு குடையோ... ஒரு வேஷ்டியோ வாங்கிக்கொடுங்கள். இதனால் நீங்கள் மகாபுண்ணியத்தை அடைகிறீர்கள் என்கிறது சாஸ்திரம்.

மகாளய பட்சம் என்பது முன்னோருக்கான நாட்கள். பட்சம் என்றால் பதினைந்து. பட்ச காலம் என்றால் பதினைந்து நாட்கள். மகாளயபட்ச காலம் என்றால், முன்னோர்களுக்கான, முன்னோர் வழிபாட்டுக்கான அற்புதமான நாட்கள். இந்த பதினைந்து நாட்களும் நம்முடைய முன்னோர்கள், நம் வீட்டில் சூட்சும ரூபமாக வந்து பார்க்கிறார்கள். நம் ஆராதனைகளை அவர்கள் நேரடியாகவே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.

ஒரு வருடத்துக்கு 365 நாட்கள். இந்த 365 நாட்களும் நாம் தினமும் சாப்பிடுகிறோம். வேலை பார்க்கிறோம். திரைப்படங்கள், தொலைக்காட்சி முதலான விஷயங்களில் பொழுதைக் கழிக்கிறோம். உறங்குகிறோம். இந்த 365 நாட்களில், 96 நாட்கள் அதாவது 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும், முன்னோரை ஆராதிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது சாஸ்திரம்.

இந்த 96 தர்ப்பண நாட்களிலும், நாள் முழுக்க முன்னோருக்காக நாம் செலவுசெய்யப்போவதில்லை. அதிகபட்சம் ஒருமணி நேரம் மட்டுமே தர்ப்பணத்தில் ஈடுபடுவோம். முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவோம். அதிலும் குறிப்பாக மற்ற எந்தக் காலகட்டத்தில் ஆராதனையை செய்கிறோமோ செய்யவில்லையோ மகாளயபட்சம் என்று சொல்லப்படும் பதினைந்து நாட்கள்... நம்முடைய பித்ருக்களுக்கான நாட்கள். பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு நம்முடைய முன்னோர்கள் வந்திருக்கும் நாட்கள். ஆகவே மறக்காமல், இந்த நாட்களில், முன்னோர் ஆராதனை செய்யவேண்டும். நாம் செய்யும் தர்ப்பணம் முதலான வழிபாடுகளை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் சூட்சுமமாக இருந்து பார்த்து குளிர்ந்து போகிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாளயபட்ச 15 நாட்களிலும் காலச்சூழலில் நாம் ஏதேனும் ஓரிரண்டு நாட்கள் மட்டுமே தர்ப்பணம் முதலான ஆராதனைகளைச் செய்யக் கூடிய சூழல் உருவாகலாம். அப்போது என்ன செய்வது என்பதற்கும் சாஸ்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது.

மகாளய பட்ச காலத்தில், மகாவியதி பாத நன்னாளில், தர்ப்பணம் செய்யவேண்டும். மறக்காமல் முன்னோர் ஆராதனை செய்யவேண்டும். குறிப்பாக, நம்முடைய முன்னோர்களை மனதார வேண்டிக்கொண்டு, யாருக்கேனும் ஒரு குடையோ ஒரு வேஷ்டியோ வழங்குவது மகா புண்ணியம்.

எவருக்கேனும் ஒரு போர்வையோ செருப்போ வழங்குவது பித்ரு தோஷத்தில் இருந்தும் பித்ரு பாவத்தில் இருக்கும் விமோசனத்தைத் தரும். ஒரு நான்குபேருக்கேனும் ஏதேனும் ஒரு உணவுப்பொட்டலம் வழங்குங்கள். வீட்டில், தனம் - தானியம் பெருகச் செய்வார்கள் முன்னோர்கள். சுபிட்சத்தைத் தந்தருள்வார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x