Last Updated : 02 Sep, 2020 07:01 PM

1  

Published : 02 Sep 2020 07:01 PM
Last Updated : 02 Sep 2020 07:01 PM

மகாளய பட்ச தினம், திதி, நட்சத்திரம்

மகாளய பட்சம் என்பது புண்ணிய காலம். மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளயபட்சம் என்பது நம் முன்னோருக்கான நாட்கள். இந்த பதினைந்துநாட்களும் முன்னோரை நினைத்து வழிபடவேண்டும். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.

2.9.2020 புதன்கிழமையில் இருந்து மகாளய பட்சம் தொடங்கியுள்ளது. இந்தநாளை செளம்ய வாஸர என்பார்கள். பிரதமை திதியில், சதய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.
3ம் தேதி வியாழக்கிழமியை குரு வாஸர என்பார்கள். துவிதியை திதி நாள். பூரட்டாதி நட்சத்திர நாள். அடுத்து 4ம் தேதி வெள்ளிக்கிழமை, பிருகு வாஸர என்பார்கள். அன்றைய திதி அதிதி. உத்திரட்டாதி நட்சத்திர நாள்.

5ம் தேதி ஸ்திர வாஸர நாளில் த்ருதியை திதியில் ரேவதி நட்சத்திர நாளில் அமைந்துள்ளது. 6ம் தேதி பானு வாஸர நாளில், சதுர்த்தி திதியில், அஸ்வினி நட்சத்திர நாளில், மகாளய பட்சத்தின் ஒருநாள் அமைந்துள்ளது.

7ம் தேதி இந்து வாஸர நாளில், பஞ்சமி திதியில், பரணி நட்சத்திர நாளில் அமைந்துள்ளது. 8ம் தேதி பெளம வாஸரநாளில், சஷ்டி திதியில் கிருத்திகை நட்சத்திர நாளாக மகாளய பட்ச நாள் அமைந்துள்ளது. 9ம் தேதி செளம்ய வாஸர நாளில், சப்தமி திதியில், ரோகிணி நட்சத்திர நாளில், மகாளய பட்ச நாள் அமைந்துள்ளது.
10ம் தேதி குரு வாஸர நாளில், அஷ்டமி திதியில், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் மகாளயபட்ச நாள் அமைந்துள்ளது. 11ம் தேதி பிருகு வாஸர நாளில், நவமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில் மகாளய பட்ச நாள் அமைந்துள்ளது.

12ம் தேதி ஸ்திர வாஸர நாளில், தசமி திதியில் புனர்பூச நட்சத்திர நாளில் மகாளய பட்சநாள் அமைந்துள்ளது. 13ம் தேதி பானு வாஸர நாளில், ஏகாதசி திதியில், பூசம் நட்சத்திரநாளில் மகாளய பட்ச நாள் அமைந்துள்ளது. 14ம் தேதி இந்து வாஸர நாளில், துவாதசி திதியில், ஆயில்யம் நட்சத்திர நாளில் மகாளய பட்ச காலம் அமைந்துள்ளது.

15ம் தேதி பெளம வாஸர நாளில், திரயோதசி திதியில், மகம் நட்சத்திர நாளில், மகாளய பட்ச நாள் அமைந்துள்ளது. 16 தேதி செளம்ய வாஸர நாளில், சதுர்த்தசி திதியில், பூரம் நட்சத்திர நாளில், மகாளய பட்ச காலம் அமைந்துள்ளது.

17ம் தேதி குரு வாஸர நாளில், அமாவாசை திதியில், பூரம் அடுத்து உத்திரம் நட்சத்திர நாளில் மகாளய பட்ச அமாவாசை நாள் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் முன்னோரை நினைத்து நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு நமஸ்கரிக்க வேண்டும். அவர்களை நினைத்து நம்மால் முடிந்த தானங்களைச் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

*******************


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x