Published : 25 Aug 2020 01:47 PM
Last Updated : 25 Aug 2020 01:47 PM
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால், இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் காணாமல் போகும். காரியம் யாவும் வெற்றியைத் தரும். இனி எல்லாக் காலமும் நல்லகாலமாகவே, நல்ல தருணமாகவே அமையும்.
பொதுவாகவே, தினமும் காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். காலையிலும் மாலையிலும் வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்தநாட்கள். இந்த நாட்களில், இல்லத்தில்... பூஜையறையில் உட்கார்ந்துகொண்டு, விளக்கேற்றிவிட்டு, கனகதாரா ஸ்தோத்திரம் படித்தும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்தும் அம்பிகையை வழிபடுவதும் மகாலக்ஷ்மித் தாயாரை வழிபடுவதும் விசேஷ பலன்களைத் தரும்.
அதேபோல், முருகப்பெருமானை நினைத்துக் கொண்டு, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடவேண்டும். இதனால், இல்லத்தில் தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். சுபிட்சம் குடிகொள்ளும்.
முக்கியமாக, செவ்வாய், வெள்ளிகளில், ராகுகால வேளையில் வீட்டில் விளக்கேற்றி வைப்பது தீயசக்திகள் எதையும் அண்டவிடாமல் செய்யும். துர்கையை நினைத்து ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். செவ்வாய்க்கிழமையன்று ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. இதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நாட்களில், இந்த நேரங்களில், பூஜையறையில் விளக்கேற்றிவையுங்கள். அப்போது, துர்காதேவியை மனதார நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்வின் சகல சங்கடங்களையும் அண்டவிடாமல் காத்தருள்வாள் தேவி.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால், இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் காணாமல் போகும். காரியம் யாவும் வெற்றியைத் தரும். இனி எல்லாக் காலமும் நல்லகாலமாகவே, நல்ல தருணமாகவே அமையும்.இனி நமக்கு நல்லகாலமே என்பதை உணருவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT