Published : 17 Aug 2020 10:45 PM
Last Updated : 17 Aug 2020 10:45 PM
நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் கோபமாக இருந்தாலோ, ஆவேசமாகப் பேசினாலோ, சுள்ளென்று வார்த்தைகளை விட்டாலோ... அவர்களை ‘அடேங்கப்பா... பத்ரகாளி மாதிரி என்ன ஆட்டம்பா’ என்று சொல்லுவோம். இப்படி கோபமும் ஆவேசமும் கொண்டிருக்கும் தெய்வங்களில் காளி முதன்மையான இடத்தில் இருக்கிறாள் என்றுதான் புராணங்கள் தெரிவிக்கின்றன.
காளி உக்கிரமான தெய்வம்தான். கடும் கோபக்காரிதான். கபட வேடங்கள் எவர் தரித்திருந்தாலும் அவர்களைச் சுட்டுப் பொசுக்குவதில் ஆங்காரம் கொண்டு செயல்படுபவள்தான். ஆனால், உண்மையான பக்தியுடன் யார் வந்தாலும், அவர்களை ஒரு தாயைப் போல் பரிவுடனும் கனிவுடனும் அரவணைத்துக் கொள்வாள். அரணெனக் காப்பாள் என்கிறார்கள் மகா காளி பக்தர்கள்.
காளியம்மன் வழிபாடு என்பது கிராம தெய்வமாகத்தான் பார்க்கப்படுகிறது. வணங்கப்படுகிறது. கிராமங்களிலும் ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் காளியம்மனுக்குக் கோயில்கள் இருக்கின்றன. சில ஊர்களில், வெட்டவெளியில் இருந்தபடி அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறாள்.
அதேசமயம், புராதனமான கோயில்களும் காளிதேவிக்கு இருக்கின்றன. திருவக்கரை வக்ரகாளி, அப்படிப்பட்டவள்தான். அழகுற அமைந்த ஆலயம் இது. சிற்ப நுட்பங்களுடன் கூடிய அற்புதமான திருக்கோயில்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெட்டுடையாள் காளி கோயிலும் பன்னெடுங்காலமாக இருக்கும் கோயில் என்கிறார்கள் பக்தர்கள். இவளும் உக்கிர தெய்வம்தான்.
ஆனால், சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோயில், வேறுவிதமான உணர்வுகளையும் அதிர்வுகளையும் கொண்ட திருத்தலம்.
சத்ரபதி சிவாஜி வழிபட்ட கோயில் இது என்கிறது ஸ்தல புராணம். ‘ஜெய் காளீ’ என்று சிவாஜி வழிபட்ட அற்புதத் தலம் இது. மகாகவி பாரதியார் வழிபட்ட காளி இவள். முக்கியமாக, கனிவும் கருணையும் கொண்ட தெய்வம்.
வழக்கமாக, உக்கிரத்துடன் இருக்கும் காளி, இங்கே சாந்த சொரூபினியாகத் திகழ்கிறாள்.
காளிகாம்பாள் அன்னையை மனதார நினைத்தாலே போதும்... நம்மைத் தேடி வந்து அருளுவாள். நம் இல்லத்தையும் உள்ளத்தையும் காத்தருள்வாள் தேவி.
காளிதேவியை இந்த ஸ்லோகம் சொல்லி குங்கும அர்ச்சனை செய்வது மகத்தான பலன்களைத் தரக்கூடியது. மாங்கல்ய பலம் பெறலாம். யம பயம் நீங்கும். ஆரோக்கியம் பெருகும்.
ஓம் காள்யாயை நம;
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம;
ஓம் பராத்மகாயை நம;
ஓம் முண்டமாலாதராயை நம;
ஓம் மஹாமாயாயை நம;
ஓம் ஆத்யாயை நம;
ஓம் கராளிகாயை நம;
ஓம் ப்ரேதவாஹாயை நம;
ஓம் ஸித்த லக்ஷ்மையை நம;
ஓம் கால ஹராயை நம;
ஓம் ப்ராஹ்மை நம;
ஓம் நாராயண்யை நம;
ஓம் மாஹேஸ்வர்யை நம;
ஓம் சாமுண்டாடயை நம;
ஓம் கவுமார்யை நம;
ஓம் அபராஜிதாயை நம;
ஓம் வராஹ்யை நம;
ஓம் நரஸிம்ஹாயை நம;
ஓம் கபாலின்யை நம;
ஓம் வரதாயின்யை நம;
ஓம் பயநாசின்யை நம;
ஓம் ஸர்வ மங்கலாயை நம;
என்று சொல்லி, குங்குமத்தால் அர்ச்சனை செய்துகொண்டே வாருங்கள். செந்நிற மலர்களையும் தாமரையும் கொண்டு அலங்கரித்து வழிபடுவது தடைகளையெல்லாம் தகர்க்கும் என்பது ஐதீகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT