Published : 04 Aug 2020 08:32 PM
Last Updated : 04 Aug 2020 08:32 PM
கோயில்களுக்குச் செல்வதும் கோயில்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம். அதேசமயம் இந்தச் சூழலில், சிவனாருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்கினாலே மும்மடங்கு பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
திருமால் அலங்காரப் பிரியர் என்றால், சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார் சிவனார்.
அருகம்புல் ஜலத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் எமபயம் விலகும். தீர்க்க ஆயுள் கிடைக்கப் பெறலாம்.
பசும்பால் கொண்டு சிவலிங்கத் திருமேனியை அபிஷேகத்தால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம்.
சிவலிங்கத்துக்கு தயிர் அபிஷேகம் செய்தால், பலம், ஆரோக்கியம், தேஜஸ் கூடும். இழந்த பொலிவையும் கெளரவத்தையும் பெறலாம்.
பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும். பித்ருக்கள் வகையிலான சொத்துகள் கிடைக்கப்பெறலாம்.
கரும்புச் சாறு கொண்டு சிவனாரை அபிஷேகம் செய்தால் தனம் விருத்தியாகும். வீட்டில் உள்ள தரித்திர நிலை நீங்கும்.
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும். சந்தோஷம் பிறக்கும்.
தேன் கொண்டு சிவனாருக்கு அபிஷேகம் செய்தால், ஆரோக்கியம் கூடும். ஆயுள் பலம் கிடைக்கும்.
புஷ்பம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
இளநீரில் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்துகளும் கிடைக்கும். தீராத நோயும் தீரும்.
உத்திராட்சம் கலந்த நீரில் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். ஞானம் பெறலாம். யோக நிலையை அடையலாம்.
பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் ஏழு ஜென்ம பாபங்களும் விலகும். புண்ணியங்கள் பெருகும்.
சந்தன அபிஷேகம் செய்து சிவனாரைப் பிரார்த்தனை செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.
ஸ்வர்ண (தங்கம்) ஜலம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் முகத்தில் தேஜஸ் கூடும்.மனதில் தைரியம் பிறக்கும். சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்!
சுத்தமான நீர் கொண்டு அபிஷேகம் செய்தால் நஷ்டமானவையும் இழந்தவையும் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வும் நிச்சயம்.
வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் கிடைக்கும். மனோதிடம் அதிகரிக்கும். இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும்.
அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், பதவி முதலானவை கிடைக்கும். மோட்சகதியை அடையலாம். இல்லத்தின் தரித்திரம் நீங்கும்.
திராட்சை ரசம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் எடுத்த காரியம் வெற்றி தரும்.
பேரிச்சம்பழம் கொண்டு அந்த திரவத்தால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவார்கள். எதிரிகள் குறித்த பயம் இல்லாமல் போகும்.
நாவல்பழம் கொண்ட ரசத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனதில் வைராக்கியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். எதிரிகள் வலுவிழந்து போவார்கள்.
கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சகல யோகங்களும் பெற்று வாழலாம்.
நவரத்தினம் கொண்ட ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் தான்யம் பெருகும். வீடு மனை யோகம் கிட்டும். ஆபரணச் சேர்க்கை நிகழும்.
மாம்பழ ரஸத்தினால் தென்னாடுடைய சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.விரும்பியவற்றை அடையலாம்.
மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் சுபமங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். மாங்கல்ய பலம் பெருகும். வீட்டில் மங்கலகரமாக வீடு திகழும் என்கிறார் சாம்பசிவ சாஸ்திரிகள். .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT