Last Updated : 28 Jun, 2020 09:42 AM

1  

Published : 28 Jun 2020 09:42 AM
Last Updated : 28 Jun 2020 09:42 AM

துஷ்ட சக்தியை விரட்டுவார் பைரவர்

பைரவரை வணங்கினால், நம்மைச் சுற்றியுள்ள துஷ்ட சக்திகளையெல்லாம் விரட்டி அருளுவார் பைரவர்.
கலியுகத்துக்கு கால பைரவர் என்பார்கள். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் பைரவரிடம் முறையிட்டால் போதும், அத்தனை கஷ்டங்களையும் விரட்டியடிப்பார் பைரவர்.
எல்லா சிவாலயங்களிலும் உள் பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, அங்கே பைரவரின் சந்நிதி அமைந்திருக்கும். நின்ற திருக்கோலத்தில், காட்சி தருவார் பைரவர். பிராகாரத்தின் நிறைவில் அடுத்த பிராகாரத்துக்குச் செல்லும் போதே, நம் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் பைரவர் என்பார்கள்.
ஒவ்வொரு அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாட்கள். பைரவரை வழிபடுவதற்கு உரிய நாட்கள். இந்தநாளில், பைரவரின் மூல மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். அதேபோல், பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் விசேஷம். மிளகு சாதம் நைவேத்தியம் செய்து பைரவருக்கு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.
தேய்பிறை அஷ்டமிதான் பைரவருக்கு ரொம்பவே விசேஷம் என்றாலும் வளர்பிறை அஷ்டமி திதியிலும் பைரவரை வணங்கலாம்.
இன்று அஷ்டமி. வளர்பிறை அஷ்டமி. இந்தநாளில், வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி, பைரவ வழிபாடு செய்யுங்கள். பைரவ ஸ்தோத்திரங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.
மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து, வேண்டிக்கொள்ளுங்கள். தெருநாய்களுக்கு உணவளிப்பது மிகப்பெரிய புண்ணியம். பைரவரின் வாகனம் நாய். எனவே நாய்களுக்கு உணவு வழங்கினால், பைரவரின் அருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பைரவரை இன்று மனதார வணங்குங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் விரட்டுவார் பைரவர். எதிரிகளை பலமிழக்கச் செய்வார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்து அருளுவார். நினைத்த காரியங்களையெல்லாம் நடத்தித் தருவார் பைரவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x