Published : 27 Aug 2015 12:41 PM
Last Updated : 27 Aug 2015 12:41 PM

வரலஷ்மி விரதக் கதை

மகத ராஜ்ஜியத்தில், குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு வசித்து வந்தனர் சாருமதி என்கிற பெண்ணும் அவளது கணவனும். அவள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள். சிறந்த பக்தி உடைய அவளின் கனவில் வந்த லஷ்மி, தன்னை வரலஷ்மியாக வழிபட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறினாளாம்.

தாயாரே, தன்னை எடுத்துக் கொடுத்ததாக எண்ணிய சாருமதி அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலஷ்மி அம்மனை வழிபட்டாள். வரலஷ்மியை வழிபட்டு அவளின் வாழ்வின் தரம் உயர்வதைக் கண்ட பிற பெண்களும், சாருமதியிடம் தங்களுக்கும் இப்பூஜையை எடுத்துத் தருமாறு கூறி, அதன் பின்னர்  வரலஷ்மி விரதத்தை அவர்களும் கடைபிடித்தனர்.

 வரலஷ்மி விரதத்தன்று வரலஷ்மி தாயாரை மனதால் வேண்டினால், அஷ்டலஷ்மிகளான ஆதி லஷ்மி, தனலஷ்மி, தானியலஷ்மி, வித்யா லஷ்மி, வீர லஷ்மி, கஜ லஷ்மி, சந்தான லஷ்மி, விஜய லஷ்மி ஆகிய அஷ்டலஷ்மிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும்  வரலஷ்மி விரதத்தன்று ஒரே தாயாரான வரலஷ்மியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x