Published : 16 Jul 2015 01:07 PM
Last Updated : 16 Jul 2015 01:07 PM

ஆடி வந்தது எப்படி?

தமிழ் வருடத்தின் நான்காவது மாதத்தில் பிறந்தவர்கள் சுசீ என்ற தெய்வத்தை வணங்கினால் பல வாழ்க்கை நலன்களைப் பெறலாம் என்று சிவாகம ரகசியம் கூறுகிறது. ஆடி மாதம் எப்படித் தோன்றியது என்பதை ஒரு புராணக் கதை மூலம் அறியலாம்.

ஆடி என்பது ஒரு அரக்கனின் பெயர். கிரகங்களின் திருவிளையாடலால் பார்வதி தேவி அவர்கள் சிவபெருமானை விட்டு விலகியிருக்க நேர்ந்தது. இதை அறிந்துகொண்ட அரக்கன் ஆடி, சிவபெருமானின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு பாம்பு வடிவம் எடுத்து உள்ளே நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகே சென்றான்.

தன்னோடு சேர்ந்திருக்க வருவது ஆடி அரக்கன் என்று தெரிந்துகொண்ட ஈசன் அவனைத் தன் கைகளால் கட்டி இறுக்கிக் கசக்கிப் பிழிந்து சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியை மனதில் கொண்டே இந்த மாதம் ஆடி என்று பெயர் பெற்றது.

தெய்வீகப் பண்டிகைகளின் காலம்

ஆடியின் முதல் நாளே பண்டிகை தினமாக வருகிறது. ஆடிப்பண்டிகையான இந்நாளில் புதுமணத் தம்பதியருக்கு சீர்செய்து வைத்துப் பெண் வீட்டார் அழைத்துப் போய் விருந்து படைப்பது வழக்கம். அங்கே ஆடிப்பால் என்று தேங்காய்ப் பாலைக் கொடுப்பார்கள். ‘ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி’ என்ற பழமொழிக்கு ஏற்றபடி அன்று சிறப்பு உபசரிப்புகளைச் செய்து பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு மாப்பிள்ளையை அவர் வீட்டுக்கு அனுப்பிவிடும் வழக்கம் உள்ளது.

ஆடியைத் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம் என்பார்கள். தை மாதம் இந்தப் பண்டிகைகள் தொடர்வதால் பண்டிகைகளை அழைக்கிற காலம் என்றும் சொல்வார்கள். ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமாக வருகிறது. தேவர்களது இரவுக் காலமாக இதனைக் கூறுவது மரபு.

தட்சிணாயனம் தொடங்கும் ஆடியில் சூட்சும சக்திகள் பல வெளிப்படுவதால் ‘சக்தி மாதம்’ என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உயிருக்கு ஆதாரமாகக் கருதப்படும் பிராண வாயு அதிகமாக வெளிப்படுகிற மாதமாக ஆடி கருதப்படுகிறது. மனித வாழ்வைச் சில வழிபாடுகள் மற்றும் ஓசை அதிர்வுகளின் மூலம் திடப்படுத்திக்கொள்வதற்காகவே வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களைக் கூட்டமாகக் கூடிச் செய்கின்றனர்.

விழாவே மகிழ்ச்சி

விழாக்களைக் காணும்போதுதான் மனிதன் வேதனைகளை மறந்து சிரிக்கிறான். முற்காலத்தில் பெண்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பறவைகள் போல வாழ்ந்தனர். ஆடி மாதத்தில், வெளியே வந்து பால்குடம் எடுத்தல், பொங்கல் இடுதல், கூழ்வார்த்தல் போன்ற சக்தி வழிபாட்டுக்கான பணிகளைச் செய்தனர். எனவே ஆடி மாதம் பெண்களுக்கு முக்கியமான மாதமாக இருக்கிறது.

ஆடி மாத விசேஷங்களைத் தவறாமல் செய்து அம்மனையும் வழிபட்டால் என்றென்றும் ஆனந்தம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x