Published : 18 Jun 2015 11:37 AM
Last Updated : 18 Jun 2015 11:37 AM
எட்டாவது வயசில் வித்யாப்பியாசம் பூர்த்தி பண்ணி அகத்துக்கு ஆசார்யாள் திரும்பினார். தகப்பனார் காலமாகிவிட்டார். தாயாருக்கு ஆதரவாக ஆசார்யாள் கொஞ்சநாள் இருந்து வந்தார். தாயாருக்கு எவ்வளவு முக்கியமான ஸ்தானம் தர வேண்டும், அவளிடம் எவ்வளவு அன்பு காட்ட வேண்டும் என்று அவர் நடத்திக் காட்டியிருக்கிறார்.
வயசும் ஆகி, ரொம்ப வருஷம் புத்ர பாக்கியமில்லாமல் இருந்து அப்புறம் வேண்டிக்கொண்டுதானே ஆசார்யாளைப் பெற்றாள்? பதியையும் இழந்திருந்த அம்மாவுக்கு வேண்டிய பணிவிடைகள் பண்ணினார்.
ஒரு நாள் அவளுக்கு ரொம்ப அசக்தமாக இருந்தது. அப்போதெல்லாம் ஆல்வாய்ப்புழை இப்போதுபோல் காலடியிலேயே ஓடிக்கொண்டிருந்தது. புண்ணிய தீர்த்தம் என்பதால் அந்த அம்மாள் அங்கே போய்த்தான் தினமும் ஸ்நானம் செய்து வருவது வழக்கம். இப்போது தேக அசெளக்கியத்தால் போக முடியவில்லை. வருத்தப்பட்டாள். “இன்னிக்குப் புண்ணிய காலம். புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ண முடியாமலிருக்கே!” என்று குறைப்பட்டுக்கொண்டாள்.
“நான் பிரார்த்தனை பண்ணுகிறேன்” என்று ஆசார்யாள் சொல்லி அப்படியே செய்தார். ஈச்வர அவதாரமானாலும் பக்தராகவே நடித்த அவதாரம் இது. அதனால்தான் முன்பு லக்ஷ்மியிடம் பிரார்த்தனை பண்ணினார்.
'அம்மா உடம்பு சரியாகி நதிக்குப் போகணும் என்று பிரார்த்தித்தால் அவளொருத்திக்கு நன்மை செய்ததோடு முடிந்துவிடும். அதற்குப் பதில் எங்கேயோ ஜன நடமாட்டமில்லா காட்டு வழியில் போய்க்கொண்டிருக்கும் நதியே இந்த கிராமம் வழியாகப் போகும்படி பிரார்த்தித்துக்கொண்டால் எல்லா ஜனங்களுக்கும் நல்லதாகுமே!' என்று நினைத்தார்.
நதியை கிருகத்துக்குக் கிட்டே வரும்படி வேண்டிக்கொண்டார். அப்படியே வந்தது. வரும் வழியில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. நதி தடம் மாற்றி வந்ததில் கோயிலுக்கு ஹீனம் ஏற்பட்டுவிட்டது. எந்த நல்ல தானாலும் கஷ்டமாகவும் கொஞ்சம் கலந்துதானே வருவதாயிருக்கிறது?
ஒரு பிராம்மணக் குழந்தை ரொம்பச் சின்ன வயசிலேயே சகல வித்யை களையும் சுவீகரித்தது. கனகதாரை பொழிய வைத்தது. தாயாருக்காக நதியைத் திருப்பி விட்டது. இந்த விஷயங்கள் சுற்றுப்புறங்களிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து, அந்த பால்யத்திலேயே அவருக்கு நிரம்ப மரியாதை ஏற்பட்டது.
சமாசாரங்கள் அந்தப் பிரதேசத்து ராஜாவின் காதுக்குப் போயிற்று. தரிசனம் செய்ய வந்தான். ஆசார்யாள் அவனிடம் சொல்லிக் கோயிலுக்கு ஜீர்ணோத்தாரணம் பண்ணுவித்தார்.
லோகத்திற்கே தர்மோத்தாரணம் செய்ய வந்து, கணக்கில்லாத ஆலயங்களில் சாந்நித்யத்தைப் புதுப்பித்துக் கொடுத்து, வைதிக ஆராதனையை ஏற்படுத்தியவர் ஆசார்யாள். அதற்கு பால்யத்திலேயே தம்முடைய பிறந்த ஊரில் இப்படி இனாகுரேஷன் நடத்திவிட்டார்.
அந்த கிருஷ்ணன் கோயில் இப்பவும் காலடியில் இருக்கிறது. ஆற்றுப் படுகையிலிருந்து கொஞ்சம் மேடான பூமியிலிருக்கிறது. ஆசார்யாள் காலடியை விட்டு சந்நியாசியாகப் புறப்படும்போதுதான் கோயில் ஜீர்ணோத்தாரணம் பண்ணி கிருஷ்ணரை மறுபடி பிரதிஷ்டை பண்ணினதாகவும் கதை சொல்வதுண்டு.
சிருங்கேரிச் சிறப்பு
ரொம்ப தூரம் இப்படித் தெற்காக சஞ்சாரம் பண்ணி துங்கபத்ரா தீரத்தில் சிருங்கேரிக்கு வந்தார்கள். அங்கே நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு தவளைக்கு வெயில் படாமல் ஒரு பாம்பு குடை பிடித்துக்கொண்டிருப்பதை ஆசார்யாள் பார்த்தார்.
'தவளையைக் கண்டால் சப்புக் கொட்டிக்கொண்டு பிடித்துத் தின்னுகிற பாம்பு இப்படி பிரியமாக ரக்ஷிக்கிறதே? துவேஷம் தெரியாத இந்த பிரதேசத்தில் சாரதாம்பாள் கோயில் கொண்டால் எத்தனை நன்றாயிருக்கும்?' என்று நினைத்தபடி ஆசார்யாள் நதிக்கரையில் போய்க்கொண்டிருந்தார்.
சட்டென்று 'ஜல் ஜல்'லும் நின்றது. 'என்ன ஆச்சு?' என்று திரும்பிப் பார்த்தார். என்ன ஆயிருந்ததென்றால் ஆற்றங்கரை மணலில் பாதம் புதைந்து, புதைந்து அவள் நடந்து வந்ததில்தான் சிலம்பு ஓசை பண்ணவில்லை. இவர் திரும்பிப் பார்த்ததால் அவள் நின்றுவிட்டாள்.
'எல்லாம் நல்லதற்கே. நாம் நினைத்ததற்கே அவளுடைய நிபந்தனையும் சாதகமாயிடுத்து!' என்று ஆசார்யாள் சந்தோஷித்து அங்கேயே சாரதாம்பாளை பீடப் பிரதிஷ்டை பண்ணி அமர்த்திவிட்டார்.
அந்த இடம் அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால் அங்கேயே மடம் ஸ்தாபித்து பல காலம் வாசம் பண்ணி அவளை உபாசித்துக்கொண்டிருந்தார். புத்தகங்கள் எல்லாம் முதல் பதினாறு வயசில் எழுதி முடித்த ஆசார்யாள், அப்புறம் இரண்டாம் பதினாறு வயசில்தான் - பதினாறே வருஷத்தில்தான் - தேசம் முழுக்க சஞ்சாரம் செய்து, அநேக காரியங்கள் பண்ணினது.
சிருங்கேரி மடத்துக்குத் தனி விசேஷம் என்னவென்றால் மற்ற மடங்கள் ஆசார்யாள் உத்தேசித்து ஸ்தாபனம் பண்ணியவை. வித்யாதி தேவதையே சிருங்கேரியில் மடம் ஏற்படும்படியாகப் பண்ணிவிட்டாள்.
அப்புறம், காஞ்சீபுரம் லோகத்துக்கே நாபி என்ற மத்திய ஸ்தானமாக இருந்ததால் அங்கே மட ஸ்தாபனம் பண்ணினார். இவை முக்கியமான மடங்கள். இன்னும் பலவும் ஸ்தாபித்தார். எல்லாம் அவர் உத்தேசப்படி. சிருங்கேரியில்தான் சாரதாம்பாள் தன் உத்தேசப்படி மடம் ஏற்படுத்திக்கொண்டது.
தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி) (ஸ்ரீ சங்கர சரிதம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT