Published : 12 Mar 2015 01:09 PM
Last Updated : 12 Mar 2015 01:09 PM
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினாலும் பத்தும் பறந்து போகும் என்பது சிவனடியார்களின் வாக்கு.
இதற்கு ஆதாரமாக அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழைச் சுட்டுகிறார்கள் அருளாளர்கள். திருப்புகழில் அருணகிரியார், `ஆவியில் ஐந்தை அபரத்தே வைத்தோதில்ஆவி ஈரைந்தை அகற்றலாம்’ என்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.
உடலுக்குப் பசி, நோய் போன்ற துன்பங்கள் நேர்கின்றன. உயிருக்குப் பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்கள் நேர்கின்றன. பிறப்பு, இறப்பு அற்ற பேரானந்தம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT