Published : 22 Jan 2015 12:57 PM
Last Updated : 22 Jan 2015 12:57 PM

வார ராசி பலன் 22-01-2015 முதல் 28-01-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும், 6-ல் கேதுவும் உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பால் மகிழ்வீர்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சித்தர்கள், மகான்கள், ஞானிகள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். சில இடர்பாடுகளும் ஏற்பட்டு விலகும். 23-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். மன மகிழ்ச்சி பெருகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 25, 26.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஆதவனை வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. மனத்துணிவு கூடும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். முயற்சி வீண்போகாது. சிலருக்கு நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலும் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 25, 26.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.

எண்கள்: 1, 3, 4, 6.

பரிகாரம்: புதன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 8-ல் வக்கிர குருவும் 10-ல் ராகுவும் உலவுவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். வாக்குவன்மை கூடும். முக வசீகரம் உண்டாகும். எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.

விளையாட்டு வீரர்கள் புகழும் பொருளும் பெறுவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி லாபம் தரும். 23-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறி, செவ்வாயுடன் கூடுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 25, 26.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, இளநீலம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும் 11-ல் சனியும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும்.

தொழிலாளர்கள், விவசாயிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகள் கூடிவரும். வெளிநாட்டு வேலை சிலருக்குக் கிடைக்கும். வீண்வம்பு வேண்டாம். 23-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடம் மாறுவதால் பணப் புழக்கம் மேலும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 25, 26.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7, 8.

பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவி செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனியும் 12-ல் சுக்கிரனும் உலவுவது அனுகூலமாகும். செலவுகள் சற்று கூடும் வாரமிது. சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. எதிலும் வேகம் கூடாது. நிதானமாக யோசித்து ஈடுபடவும். பேச்சிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அயராமல் பாடுபட்டால் பயன் பெறலாம். எதிலும் அலட்சியப் போக்குக் கூடாது. வீண்வம்பு, சண்டைகளில் ஈடுபடவேண்டாம்.

பிற மொழி, மத, இனக்காரர்களால் சங்கடம் உண்டாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை. நல்ல எண்ணங்கள் மனத்தில் உருவாகும். தர்ம காரியங்களில் ஈடுபடச் சந்தர்ப்பம் கூடிவரும். பிறரால் போற்றப்படுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பெற்றோரால் ஓரளவு நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 23, 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 6, 8.

பரிகாரம்: சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் உலவுவது சிறப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களின் நிலை உயரும்.

மாணவர்களது நோக்கம் நிறைவேறும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினருக்கு லாபம் கிடைக்கும். கோபம் அதிகரிக்கும். பிற மொழி, மத, இனக்காரர்களால் பிரச்சினைகள் சூழும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம். . சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு சென்று வாழ வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 25, 26.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: விநாயகர், துர்கை, சுப்பிரமணியர் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்ல

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x