Published : 29 Jan 2015 01:10 PM
Last Updated : 29 Jan 2015 01:10 PM

திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் கும்பாபிஷேகம்

திருவொற்றியூர், அருள்மிகு பட்டினத்தார் திருகோயில் கும்பாபிஷேகம் கடந்த 26-ம் தேதி அன்று காலை ஏழு மணிக்கு நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர்.

காலை 5 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடந்து காலை 6.30 மணிக்கு மஹா பூர்ணஹூதி முடிந்து 6.45 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி, காலை 6.50 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகமும், காலை 7 மணிக்கு பட்டினத்தார் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பிரதான கும்பம், விமானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஏராளமான பக்தர்கள் நமசிவாய கோஷத்தை முழங்க திருவொற்றியூர் சங்கர் சிவாச்சாரியார் உப சர்வசதகரால், கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் கற்பூரத் தீபாராதனை செய்யப்பட்டு மீதமிருந்த கலச நீர் பொது மக்களுக்கும் தெளிக்கப்பட்டது.

மஹா கும்பாபிஷேகத்தை திருவேற்காடு சிவஸ்ரீ.குருமூர்த்தி சிவாச்சாரியார் சர்வ சாதகமாக இருந்தும், சாதகர் ஏழு நபர்களும், ஆசாரியர்கள் பத்து நபர்களுடன் யாகசாலை நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் முனைவர்.ரா. கண்ணன் இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால், திருவொற்றியூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.குப்பன், சென்னை மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு தலைவர்மு.தனரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமதி.மா.கவிதா, இணை ஆணையர்அ.தி.பரஞ்சோதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி.பா.விஜயா, திருவொற்றியூர் சரக காவல்துறை உதவி ஆணையர்ஆர்.ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் திருவாளர்கள். லக்ஷ்மிகாந்த பாரதிதாசன், து.சந்திரசேகரன், து.சம்பத், செந்தூர்பாண்டியன், பொன்சரவணன், சுரேஷ், துரு.பிரகாஷ், சரவணாகுமார், சுப்பிரமணியன், நித்யானந்தம் மற்றும் ஆய்வாளர் லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x