Last Updated : 29 Jan, 2015 02:55 PM

 

Published : 29 Jan 2015 02:55 PM
Last Updated : 29 Jan 2015 02:55 PM

மூன்று போதகர்கள் மூன்று கோணங்கள்

கடவுள் பூமிக்குக்கு அனுப்பிய இறைதூதர்களில் தன் மகனாகிய இயேசுவுக்கு முன்பு ‘திருமுழுக்கு யோவானைப் பிறக்கச் செய்தார். இயேசுவும் அவரிடமே திருமுழுக்கு பெற்றார். இயேசு தன் போதனையைத் தொடங்கும் முன் பாவங்களில் திளைத்திருந்த யூதேயாவின்(இன்றைய இஸ்ரேல்) அதிகார வர்க்கத்தினரைப் பார்த்து “ விரியன் பாம்பின் குட்டிகளே..” என்று சாடினார். அவர்களது மலினமான, பாவட்டப்பட்ட வாழ்க்கை முறையைக் கடுமையாகச் சாடினார்.

யூதர்களின் அதிகார வர்க்கத்தில் மத பீடத்தில் குருமார்களாக வாழ்ந்தவர்கள் முழு வலிமையோடு மக்களைத் தலையாட்டி பொம்மைகளாக வைத்திருந்தவர்கள் பரிசேயர் மற்றும் சதுசேயர்கள். இவர்களில் சில நல்லவர்களும் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு பரிசேயர்தான் நிக்கொதேமு என்பவர். அவர் மதகுரு மட்டுமல்ல யூதர்களுடைய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். வயதில் முதிர்ந்தவர். இயேசுவின் புகழ் பரவி வருவதையும் எளிய மக்கள் அவரை நோக்கிப்போவதையும் கண்டு, அவர் இயேசுவை உளப்பூர்வமாகக் கபடமின்றிச் சந்திக்க விரும்பினார். ஆனால் மற்ற பரிசேயர்களுக்குத் தாம் செல்வது தெரிந்தால் விவகாரம் ஆகிவிடுமே என்று ஓர் இரவில் இயேசுவிடம் சென்று அவரிடம் உரையாடினார்.

மறுபடியும் பிறக்க முடியுமா?

நிக்கொதேமு இயேசுவைப் பார்த்ததுமே தன்னியும் அறியாமல் அவரைத் தன் வாயால் “ரபீ…” என்று பணிவுடன் அழைத்தார். பிறகு “ நீங்கள் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்; கடவுள் தன்னோடு இருந்தால் தவிர ஒருவனாலும் நீங்கள் செய்யும் இப்படிப்பட்ட அடையாளங்களைச் செய்ய முடியாது” என்றார்.

அப்போது இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால், கடவுளுடைய அரசாங்கத்தைக் காண முடியாது” என்றார். அதற்கு நிக்கொதேமு, “வயதான பின்பு ஒருவனால் எப்படிப் பிறக்க முடியும்? இரண்டாவது தடவை அவன் தன்னுடைய தாயின் வயற்றிலிருந்து பிறக்க முடியுமா?” என்றார்.

அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், தண்ணீரினாலும் கடவுளுடைய சக்தியினாலும் ஒருவன் பிறக்காவிட்டால், அவன் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய முடியாது. மனிதனால் பிறக்கிறவன் மனிதனுடைய பிள்ளை, கடவுளுடைய சக்தியினால் பிறக்கிறவன் கடவுளுடைய பிள்ளை. ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டுமென நான் உங்களிடம் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம்.

காற்று தனக்கு விருப்பமான இடத்தில் வீசுகிறது, அதன் ஓசையை நீங்கள் கேட்கிறீர்கள்; ஆனால் அது எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. கடவுளுடைய சக்தியினால் பிறந்திருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்” என்று தன் பிறப்பு குறித்த ரகசியத்தைப் பகிர்ந்த தன்னைக் காற்றுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

இருளும் ஒளியும்

அதேபோல ஒளி என்பதைக் கடவுளுக்குப் பணிந்து நடப்பவர்களின் பார்வையாக உருவகப்படுத்தினார் இயேசு. தனது போதனைகள் மீது நம்பிக்கை வைப்பது கடவுளின் மகனாகிய தன் மீது வீசுவாசம் வைப்பதற்குச் சமம் என்றார். “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்த அளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்.

இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு அல்ல, மீட்பதற்கே கடவுள் தம்முடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அவர்மீது விசுவாசம் வைக்கிறவன் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருப்பது இதுவே: இந்த உலகத்துக்கு ஒளி வந்திருக்கிறது; ஆனாலும், மக்களுடைய செயல்கள் பொல்லாதவையாக இருப்பதால் ஒளிக்குப் பதிலாக இருளையே அவர்கள் நேசிக்கிறார்கள்.

தீய செயல்களைத் தொடர்ந்து செய்கிற ஒருவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக ஒளியிடம் அவன் வராமல் இருக்கிறான். நீதியான செயல்களைச் செய்கிறவனோ, தன்னுடைய செயல்கள் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக இருக்கின்றன என்பது வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்” என்றார்.

யோவானின் சாட்சியம்

இயேசுவே கடவுளின் மகன் என்பதை யோவன் சாட்சியாகப் பிரசங்கித்தார். தூய்மைச் சடங்கு குறித்து யூதன் ஒருவனோடு யோவானுடைய சீடர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் யோவானிடம் வந்து, “ரபீ, யோர்தான் நதிக்கு அக்கரையில் உங்களுடன் ஒருவர் இருந்தாரே, அவரைப் பற்றி நீங்களும் சாட்சி கொடுத்தீர்களே, இதோ, அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்து வருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு யோவான், “பரலோகத்திலிருந்து அருளப்பட்டால் தவிர எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ‘நான் கிறிஸ்து அல்ல, ஆனால் அவருக்குமுன் அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகளை உடையவரே மணமகன். என்றாலும், மணமகனின் தோழன் அவரருகே நின்று அவர் பேசுவதைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறான். இந்த மகிழ்ச்சி எனக்கு நிறைவாகக் கிடைத்திருக்கிறது. அவருடைய செயல்கள் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும், என்னுடைய செயல்களோ குறைந்துகொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

மேலிருந்து வருகிறவர்

எல்லாருக்கும் மேலானவர். பூமியி லிருந்து வருகிறவரோ பூமியிலிருந்து வருகிறபடியால் பூமிக்குரிய விஷயங் களைப் பேசுகிறார். பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாருக்கும் மேலானவர். தாம் பார்த்ததையும் கேட்டதையும் பற்றி அவர் சாட்சி கொடுக்கிறார், ஆனால் ஒருவனும் அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை.

அவருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டவனோ, கடவுள் உண்மையானவர் என்பதை முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். கடவுளால் அனுப்பப்பட்டவர் கடவுளுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; ஏனென்றால், கடவுள் அவருக்குத் தமது சக்தியை அளவில்லாமல் கொடுக்கிறார். தகப்பன் தம் மகன்மீது அன்புகாட்டி, எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்படைத்திருக்கிறார். மகன்மீது விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லா வாழ்வு இருக்கிறது” என்றார்.

நாம் கண்ட இந்த மூன்று போதகர்கள் மூன்றுவித கோணங்களில் இயேசுவை நமக்குத் தனித்துக் காட்டுகிறார்கள். நீங்கள் ஒளியில் வாழும் நியாயவான் என்றால் உங்களுக்கு உறங்கும் வேளையில் கூட இருள் தேவைப்படாது. நீங்கள் ஒளியாய் மிளிர கடவுள் எனும் காற்று அவசியம் அதையும் மறக்காதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x