Published : 08 Sep 2016 11:12 AM
Last Updated : 08 Sep 2016 11:12 AM

வார ராசிபலன் 8-9-2016 முதல் 14-9-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம். இதனால் மன அமைதி குறையும். காரியம் தாமதம் ஆகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் தொல்லைகள் ஏற்படும். 10-ஆம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

மனத்தில் தெளிவு பிறக்கும். புதிய சொத்துக்கள் சேர வழிபிறக்கும். வாரப் பின்பகுதியில் காரியானுகூலம் உண்டாகும். நெருங்கிய நண்பர்கள் உதவி புரிவார்கள். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. பொருளாதாரப் பிரச்சினை உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 13, 14.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு.

‎நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 7.‎

பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது குறை ஆகும். நண்பர்கள், உறவினர்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். அறப்பணிகளில் நாட்டம் கூடும்.

எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். இயந்திரப்பணியாளர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுநர்கள், காவல் மற்றும் இராணுவத்தில் பணிபுரிபவர்கள், ரியல் எஸ்டேட் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் சோதனைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் தொடர்பைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் பதற்றம் அடியோடு கூடாது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 14 (காலை).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7

பரிகாரம்: செவ்வாயையும், முருகனையும் வழிபடுவது நல்லது.



மிதுனம்

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் ராகுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். நிலபுலங்கள், வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளும் தொழிலாளர்களும் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். செய்து வரும்தொழிலில் அதிக கவனம் செலுத்தி, அயராது பாடுபட்டால் வளர்ச்சி காணலாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 6, 8.

பரிகாரம்: மலையப்பப் பெருமாளை வழிபடவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.



கடகம்

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பண வரவு சற்று அதிகரிக்கும். திறமை வீண்போகாது. எதிரிகள் அடங்கிப் போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். தகவல் தொடர்பு இனங்களால் வருவாய் கிடைத்துவரும். வியாபாரிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் ஆதாயம் கொண்டுவரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.

கணவன் மனைவி உறவு நிலை சீராகும். குரு, சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அவர்களால் ஏமாற்றப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. கண், வலது காது, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், சிவப்பு.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் ஓரளவு நலம் புரிவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். நண்பர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். மக்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிட்டும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தர்ம குணம் வெளிப்படும். எதிரிகள் அடங்குவார்கள். பிரச்சினைகள் எளிதில் தீரும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். சனி 4-லும், ராகு ஜன்ம ராசியிலும் கேது 7-லும் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 9.

பரிகாரம்: அர்த்தாஷ்டம சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.



கன்னி

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. திறமைக்கும் உழைப்புக்கும் உரியப் பயன் கிடைத்துவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். சூரியன், புதன், ராகு ஆகியோர் 12-ல் இருப்பதால் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். அரசுப்பணிகளில் அதிக கவனம் தேவை. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். பயணம் சார்ந்த இனங்களில் எச்சரிக்கை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களாலும் தந்தையாலும் சங்கடங்கள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன்.

எண்கள்: 6, 7, 8.

பரிகாரம்: திருமுருகனையும், மகாவிஷ்ணுவையும் வழிபடுவது நல்லது.



துலாம்

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும்.

எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் ஏற்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர வழிபிறக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் இருப்பதால் மக்களால் மன அமைதி குறையும். செலவுகளும் ஏற்படும். மறதியால் அவதிப்பட வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.



விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்குப் பின்வாங்காமல் அயராது பாடுபடுபவர்களுக்கு வருவாய் கூடும். அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். அதிர்ஷ்ட இனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மக்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் முன்னணிக்கு உயருவார்கள். சிலருக்கு மறுமணம் ஆக வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: ஜன்மச் சனிக்குப் பிரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது நல்லது. அனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் சிறப்பாகும்.



தனுசு

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் கேது உலவுவது நல்லது. சூரியனும் புதனும் 9-ல் இருப்பதும் ஓரளவு நலம் தரும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பது நல்லது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். 10-ஆம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும்.

முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். தெய்வப்பணிகளிலும், தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். தந்தையால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் அளவோடு உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 11, 14 (காலை).

திசைகள்: வடமேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 7.

பரிகாரம்: ஏழை, எளியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வது நல்லது. சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.



மகரம்

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது குறை. ஜன்ம ராசியை குருவும், சனியும் பார்ப்பதால் உடல்நலம் சீராக இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் செழிப்புக் கூடும்.

முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 2-ல் கேதுவும், 8-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். கண், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. 9-ஆம் தேதி முதல் சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. விளையாட்டு, விநோதங்களில் ஈடுபடும்போதும் பயணத்தின்போதும் பாதுகாப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 13, 14 (காலை).

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.



கும்பம்

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவது வரவேற்கத்தக்கது. மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் அளவோடு நலம் பெறுவார்கள். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் சூரியனும் புதனும் ராகுவும், 8-ல் குருவும் உலவுவதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணை நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம்.

எண்கள்: 6, 8, 9 .

பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கும் வேதம் பயில்பவர்களுக்கும் உதவி செய்வது நல்லது.



மீனம்

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவது விசேடம் ஆகும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பொருளாதார நிலை உயரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடங்கள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பங்குதாரர்களால் தொல்லைகள் உண்டாகும். என்றாலும் குரு பலத்தால் சமாளிப்பீர்கள். வாரப் பின்பகுதியில் மக்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு .

எண்கள்: 1, 3, 4, 5, 9.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி, கணபதி வழிபாடு நலம் சேர்க்கும். ஏழைப் பெண்களுக்கு நல்லுதவி செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x