Published : 19 Jan 2017 11:15 AM
Last Updated : 19 Jan 2017 11:15 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். பணவரவு சீராக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வழக்குகளிலும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு கூடிவரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். ஜலப்பொருட்களால் வருவாய் கிடைக்கும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.
மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். தலை, கண், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (இரவு), 23.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: திருமாலையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். போக்குவரத்து இனங்களால் வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
மாதர்களது எண்ணம் ஈடேறும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் உலவுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. தாய் நலனிலும் அக்கறை தேவைப்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலும் கூடும். ஜல சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குரு 12-ல் இருப்பதால் மக்களால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். தொழிலதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (பகல்), 23.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: குரு, சனி, கேது ஆகியோருக்கு பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் கேதுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். பொன்னும் பொருளும் சேரும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும்.
12-ல் சனி உலவுவதால் வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்சினைகள் சூழும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதி: ஜனவரி 19.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். உழைப்பு வீண்போகாது. கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைத்துவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ஜன்ம ராசியில் சூரியன் உலவுவதால் உஷ்ணாதிக்கம் அதிகமாகும்.
உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதாலும், 12-ல் புதன் உலவுவதாலும் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் விழிப்பு தேவை. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: நாக பூஜை செய்யவும். விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 9-ல் குருவும் 10-ல் சனியும் 11-ல் புதனும் உலவுவது நல்லது. தோற்றப்பொலிவு கூடும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தொலைதூரப் பயணமும் புனிதப் பயணமும் மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். சமுதாய நலப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மக்களால் நலம் உண்டாகும்.
பண நடமாட்டம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சூரியன், செவ்வாய், ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும் என்றாலும் குருபலத்தால் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (இரவு), 23.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: ராகு, கேது, சூரியன் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. புதியவர்களின் தொடர்பு பயன்படும். பயணத்தால் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடப் பெறுவார்கள். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு கிடைக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.
ஜன்ம ராசியில் செவ்வாயும் 8-ல் குருவும் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் பொறுப்புடன் காரியமாற்றிவருவது அவசியமாகும். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள் என்பதால் பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. விளையாட்டு விநோதங்களிலும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (பகல்), 23.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT