Last Updated : 12 Dec, 2013 12:00 AM

 

Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

தென்னகத்தின் பொற்கோயில்

வேலூர் மாவட்டத்தில் திருமலைக்கோடி எனும் புண்ணிய கிராமத்தில் ஸ்ரீபுரம் என்னும் பொற்கோயில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் தங்கத்தால், அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு திருக்கோயில் எழுப்பி இன்று ஸ்ரீபுரம் எனும் திருநாமத்தைப் பெற்றுள்ளது. அன்னைஸ்ரீலட்சுமி நாராயணியின் திருவருளும், ஸ்ரீசக்தி அம்மாவின் குருவருளும் இந்த ஸ்ரீபுரத்தில் நிறைந்திருக்கிறது . அன்னை நாராயணிக்கு தங்கத்தால் கோயில் எழுப்ப 2001ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

தெய்வ பக்திக்கு மஹாலக்ஷ்மி, ஞானத்திற்கு ஸ்ரீசக்தி அம்மாவின் பொன்மொழிகள், மன அமைதிக்கு இயற்கை எழில் சூழ்ந்த ஸ்ரீபுரத்தில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திரத்தின் நடுவில் ஸ்ரீமகாலக்ஷ்மி கோயில் அமைந்துள்ளது. அன்னைஸ்ரீமகாலக்ஷ்மியை தரிசிக்க ஏழு ஸ்ரீபாத துவாரம், பதினான்கு தீர்த்தக் குண்டங்கள், பதினான்கு நீரூற்றுகள், எட்டு மண்டபங்கள் வழியாக நட்சத்திரப் பாதையில் இயற்கை எழில் சூழ்ந்த பூங்கா வழியாகக் கடந்து செல்லும்போது மனிதனைப் புனிதனாக்கும்ஸ்ரீசக்தி அம்மாவின் ஞான உபதேசங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

அன்னைஸ்ரீமகாலக்ஷ்மியைத் தரிசிக்கும் முன்பே மனம், ஆன்மிகத் தில் லயித்திருக்க நீராழிக்கு நடுவில் அமைந்திருக்கிறது அன்னைஸ்ரீமகா லக்ஷ்மி ஆலயம். நான்கு கோபுரங்கள், 38 தங்கத் தூண்களில் இருபத்தியிரண்டு கஜ தூண்கள், பதினாறு அன்னத் தூண்கள் எனக் கருவறையில் அன்னைஸ்ரீமகாலக்ஷ்மி தங்கத் தாமரை மீது பக்தர் களை நோக்கிப் புன்னகையுடன் அருள் பாலிக்கிறாள்.

தங்கப் பதக்கங்கள், வைரங்கள் மின்ன, முத்தாரங்கள், பட்டாடைகள், தங்கக் கிரீடம் மின்ன பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அன்னைஸ்ரீமகாலக்ஷ்மியைத் தரிசிக்கக் கண்கள் கோடி வேண்டும். எத்தனை முறை, எவ்வளவு நேரம் தரிசித்தாலும் அன்னையை விட்டு அகல மறுக்கிறது மனம். அன்னை யின் அருள் பார்வையால், தன்னை தரிசிக்கும் பக்தர்களின் நெஞ்சங்களிலும் வீடுகளிலும் மகாலக்ஷ்மி நிறைந்திருக்கிறாள்.

கோயில்களில் பொதுவாக துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம் ஸ்தாபிதம் செய்யப்படும். நாராயணி பீடத்தில்ஸ்ரீசக்தி அம்மாவின் ஆசியால் கொடிமரத்திற்குப் பதிலாக சஹஸ்ர தீபம் அமைக்கப்பட்டுள்ளது. தீப மண்டபத்தில் ஆமையின் மீது அமைக்கப்பட்டுள்ள சஹஸ்ர தீபம், 10 அடுக்குகளுடன் 1008 விளக்குகள் கொண்டது. இந்த மண்டபத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் அஷ்டலட்சுமிகளுக்கும் தீபம் ஏற்றுவதற்குச் சமமாகக் கருதப்படும். இதனால் நம்மைச் சுற்றியுள்ள இருள் விலகி சகல ஐஸ்வர்யங்களும் வாழ்வில் கிடைப்பதுடன் நோயற்ற வாழ்வு, வியாபாரம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

நாராயணி பீடத்தில் சக்தி அம்மாவின் திருக்கரங் களால் தினமும் துளசி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை நடத்தப்படுகிறது.ஸ்ரீமங்கல நாராயணிக்கு 27 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பட்டாடை, ஆபரணங்களால் அலங் கரிக்கப்பட்டுஸ்ரீமங்கல நாராயணிக்கு 27 வகையான தூப தீப ஆராதனைகளை சக்தி அம்மா செய்கிறார்.

ஆன்மீகப் பயணமாக ஸ்ரீபுரம் வரும் பக்தர்கள் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியை தரிசித்த பிறகு பகல் 12 மணி முதல் 3 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பக்தர்கள் இங்கே சாப்பிடுகிறாகள்.

தென்னகத்தில் உள்ள ஒரே தங்கக்கோவிலான இது கண்கவரும் அழகுடனும் கம்பீரத்துடனும் பக்தர்களை ஈர்த்துவருகிறது. வேலூரின் அடை யாளங்களில் ஒன்றாகவே இது மாறிவிட்டது என்று சொன்னால் அதில் மிகை இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x