Published : 26 Jan 2017 09:33 AM
Last Updated : 26 Jan 2017 09:33 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்துக்கு மாறுவது குறை. 31-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். செயலில் வேகம் அதிகமாகும். வாழ்க்கைத்துணைவராலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். பயணம் சார்ந்த வகையில் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம், அவ்வப்போது பாதிக்கும்.
தலை, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்; கவனம் தேவை. மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். 27-ம் தேதி முதல் வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை தேவைப்படும். எதிர்ப்பு இருப்பினும் சமாளிப்பீர்கள். 31-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்களுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிய முன்வருவார்கள். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் சேர வாய்ப்பு கூடிவரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். புதிய பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30, பிப்ரவரி 1.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: திருமாலையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடத்துக்கு மாறுவது விசேடமாகும். 31-ம் தேதி முதல் புதன் 3-ம் இடத்துக்கு மாறுவது குறை. நல்லவர்கள் உங்களைச் சூழ்ந்திருப்பார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். பேச்சாற்றல் கூடும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். தகவல்தொடர்பு துறை ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். வாகன யோகம் உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பயணத்தால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும்.
சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவுசெய்ய வேண்டிவரும். மாதர்கள் நலம் பெறுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். ஊகவணிகத்தில் ஓரளவு லாபம் உண்டு. மகளுக்கு சுப காரியம் நிகழும். அறிவாற்றல் பளிச்சிடும். 31-ம் தேதி முதல் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஜன்மச் சனியின் காலமிது என்பதால் எதையும் சுலபமாக நிறைவேற்ற முடியாமல் தடைகளும் தாமதமும் ஏற்படும். குரு 12-ல் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30, பிப்ரவரி 1.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும். கணபதி ஜப, ஹோமம் செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் கேதுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். 31-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறுவது குறிப்பிடத்தக்கது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய பொருட்கள் சேரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தியானம், யோகா ஆகியவற்றில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். எதிர்பாராத திடீர்ப் பொருள்வரவுக்கும் இடமுண்டு. சுகபோகம் கூடும். முக்கியமான சுப காரியங்கள் இனிது நிறைவேறும்.
மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் ஏற்படும். நிலபுலங்கள் சேரும். வாகன யோகம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் செல்வாக்கு உயரும். 12-ல் சனி இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30, பிப்ரவரி 1.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. 27-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். 31-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. வார முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கண் உபத்திரவம் ஏற்படும். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நன்மை ஏற்படும். நல்ல தகவல் வந்து சேரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது நிலை உயரும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 30, பிப்ரவரி 1.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: மகா விஷ்ணுவை வழிபடவும். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 9-ல் குருவும் 10-ல் சனியும் 11-ல் புதனும் உலவுவது நல்லது. 27-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். 31-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும் நேரமிது. கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பண நடமாட்டம் திருப்தி தரும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வாரப்பின்பகுதியில் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். உழைப்பு வீண்போகாது. பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் நலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசுப்பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களாலும் உடன்பணிபுரிபவர்களாலும் தொல்லைகள் சூழும். கண் உபத்திரவம் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். 31-ம் தேதி முதல் வியாபாரிகளுக்குப் பிரச்னைகள் சூழும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 30, பிப்ரவரி 1.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். விநாயகரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 27-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகும். 31-ம் தேதி முதல் புதன் 11-ம் இடத்துக்கு மாறுவதும் நல்லதே. எடுத்த காரியத்தில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசு உதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் நன்மையும் விளையும். மருத்துவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பயணம் சார்ந்த வகையில் லாபம் உண்டு.
வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி அடையும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் சேரும். குரு 8-ல் இருப்பதால் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மறைமுக எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பேசிப் பழக வேண்டாம். தொழில் ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. எதிலும் அவசரம் கூடாது. நிதானம் மிகத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, பிப்ரவரி 1.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT