Published : 30 Jun 2016 12:07 PM
Last Updated : 30 Jun 2016 12:07 PM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும்; சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பொருள் வரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முக வசீகரம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடம் மாறி சனியோடு கூடுவதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. இயந்திரப்பணியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். 6-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் செவ்வாயும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. பேச்சாற்றல் கூடும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்களின் நிலை உயரும். பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேர வழிபிறக்கும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைக்கும். பக்திமார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் தெளிவு பிறக்கும். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடம் மாறி சனியோடு கூடுவது சிறப்பாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை,பச்சை, இள நீலம்.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கலைத்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் தங்கள் திறமைக்குரிய பயனைப் பெறுவார்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 6-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் பண வரவு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 2, 6.
திசைகள்: வடக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பிள்ளைகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.
பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 6-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 2-ல் ராகுவும், 12-ல் சூரியனும் இருப்பதால் கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 2, 6.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இள நீலம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதும் சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபடவும், அவற்றில் வெற்றி காணவும் சந்தர்ப்பம் கூடிவரும். எதிர்ப்புகள் விலகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும். முக்கியமானவர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடம் மாறுவதும் சனியோடு கூடுவதும் சிறப்பாகாது. 6-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதும் குறை ஆகும். நண்பர்கள், உறவினர்களால் சங்கடங்கள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: தென் கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, இள நீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும் 10-ல் சூரியனும்; புதனும் உலவுவதால் தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.
சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். 6-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கை, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT