Published : 23 Jun 2016 11:48 AM
Last Updated : 23 Jun 2016 11:48 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் புதன்; சுக்கிர, 11-ல் குரு; ராகு உலவுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரமிது. சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.
பொருள்வரவு கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும்.
பெண்களின் நோக்கம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். ஜன்ம ராசியில் செவ்வாயும் 2-ல் சனியும் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: கணபதியை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதன்; சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. குரு 2, 4, 6-ம் இடங்களையும், கேதுவையும் பார்ப்பது சிறப்பு. குடும்ப நலம் சீராக இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்
. கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ராசிநாதன் செவ்வாய் 12-லும், ஜன்ம ராசியில் சனியும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உடன்பிறந்தவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வேலையாட்களால் தொல்லைகள் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. தந்தையாலும், பிள்ளைகளாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: தென் மேற்கு, வடக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: முருகனை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் குருவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. பெரியவர்களும் தனவந்தர்களும் ஆசிபுரிவதுடன் உங்களுக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் துணிவு கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிலபுலங்கள் சேரும்.
சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர் களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. கலைஞர்கள், மாதர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். 28-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3,7,9.
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம் சொல்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும்; புதனும், 10-ல் செவ்வாயும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். நிர்வாகத் திறமை கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.
திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். சுரங்கப் பணியாளர்கள், ஆலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும்
. முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். குரு, சுக்கிரன், ராகு, கேதுவின் நிலை சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் தொல்லைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: கருநீலம், சிவப்பு, பச்சை.
எண்கள்:1, 5, 8, 9.
பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும். வேதம் பயின்றவர்கள், ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் சனியும் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் நிகழும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் விசேஷமான வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
பெரியவர்கள், தனவந்தர்கள் உதவுவார்கள். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பேச்சில் திறமை வெளிப்படும்.
முக வசீகரம் கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு கூடும். சாதுகள் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 26.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9 .
பரிகாரம்: விநாயகர் அகவல் படிப்பது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. சுகமும் சந்தோஷமும் கூடும். மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். தாய் வழியினரால் நலம் கூடும்.
பயணம் பயன்படும். நிலபுலங்கள் சேரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ராசிநாதன் குரு 6-ல் உலவுவது சிறப்பாகாது. சூரியன், செவ்வாய், சனி, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தை நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளின் நடத்தையில் கவனம் செலுத்துவது நல்லது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்).
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெண்மை, இள நீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவு தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT