Published : 06 Nov 2014 12:12 PM
Last Updated : 06 Nov 2014 12:12 PM

வார ராசிபலன் 6-11-2014 முதல் 12-11-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மற்றவர்கள் உங்களைப் போற்றிப் புகழுவார்கள். சுப காரியங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பேச்சில் இனிமை தவழும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். முகப்பொலிவு கூடும். வாரப் பின்பகுதியில் முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும்.

உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். சிறு பயணத்தின் மூலம் ஒரு எண்ணம் நிறைவேறும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோர் இருப்பதால் கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் ஏற்படும். சகிப்புத் தன்மை தேவை. கூட்டாளிகளை நம்பி ஏமாற வேண்டாம். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. .வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். நல்லோர் தொடர்பை வலுப்படுத்திக்கொண்டு, அவர்களது ஆலோசனைகளின்படி செயல்பட்டால் நலம் பெறலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 9, 10, 12. .

திசைகள்: தென்மேற்கு, தெற்கு. .

நிறங்கள்: பச்சை, புகை நிறம், கறுப்பு.

எண்கள்: 4, 9.

பரிகாரம்: சூரியனை வழிபடுவது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம்.



ரிஷப ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சிக்கல் ஏற்படும். மன அமைதிக் குறைவும் உண்டாகும். வார நடுப்பகுதியில் முக்கியமான தகவல் வந்து சேரும். கற்பனை ஆற்றல் கூடும். வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். அரசியல், நிர்வாகம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மனத் தெளிவு பெறுவார்கள். 3-ல் குருவும் 5-ல் ராகுவும் இருப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். 6-ல் சுக்கிரனும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் வாழ்க்கைத் துணை நலனிலும், சகோதர நலனிலும் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 9, 10, 12. .

திசைகள்: வடமேற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, நீலம், ஆரஞ்சு..

எண்கள்: 1, 5, 7, 8.

பரிகாரம்: குரு, ராகு, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கவும்.



மிதுன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 5-ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் முக்கியமான எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பண நடமாட்டம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிட்டும். நல்லவர்கள் உதவ முன்வருவார்கள். வார நடுப்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வாரக் கடைசியில் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மதிப்பு உயரும்.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சுபிட்சம் கூடும். 4-ல் ராகு இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாது. 5-ல் சூரியனும் சனியும் உலவுவதால் மக்களால் சில இடர்ப்பாடுகளும் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். 7-ல் செவ்வாய் உலவுவதால் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 10, 12.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு..

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஸ்ரீரங்கநாதரை வழிபடவும்.



கடக ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். செயலில் வேகம் பிறக்கும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு நலம்புரிவார்கள். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு விலகியிருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் எண்ணம் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் சிலரைத் தேடி வரும். எதிரிகள் அடங்குவார்கள். வாரக்கடைசியில் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இடமாற்றம் உண்டாகும். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 6, 9..

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, இளநீலம், சிவப்பு...

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துகொள்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.



சிம்ம ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் சனியும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். நிர்வாகத் திறமை கூடும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். சமுதாய நலனில் அக்கறை உண்டாகும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும்.

வாரப் பின்பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் 3-ல் புதனும் இருப்பதால் குடும்ப நலனில் கவனம் தேவைப்படும். பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். கண், மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 9, 10, 12..

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, .

எண்கள்: 1, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது, புதன், குரு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்வதும் கேட்பதும் சிறப்பாகும்.



கன்னி ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் சந்திரன் 8-ல் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பொருளாதார நிலையில் விசேஷ வளர்ச்சியைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். தொழில் விருத்தி அடையும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்கள் லாபம் தரும். ஜன்ம ராசியில் ராகுவும், 4-ல் செவ்வாயும் 7-ல் கேதுவும் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கவே செய்யும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 9, 10, 12.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x