Published : 12 Jan 2017 11:06 AM
Last Updated : 12 Jan 2017 11:06 AM

வார ராசிபலன் 12-01-2017 முதல் 18-01-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் உலவுவது சிறப்பாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்துக்கு மாறுவது குறிப்பிடத்தக்கது. 16-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. 16-ம் தேதி முதல் குரு 7-ம் இடத்துக்கு வருவது நல்லது. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். முன்னேற்றத்துக்கான தகவல் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். 16-ம் தேதி முதல் மக்கள் நலம் சீராகும். பண நடமாட்டம் கூடும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். 8-ல் சனியும், 16-ம் தேதி முதல் 12-ல் செவ்வாயும் உலவும் நிலை அமைவதால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் பிரச்சினைகள் சூழும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16, 18.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், சிவப்பு, இளநீலம்.

எண்கள்: 6, 7, 9.‎ | பரிகாரம்: அனாதைகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சாற்றல் வெளிப்படும். நல்ல தகவல் வந்து சேரும். அலைச்சல் வீண்போகாது. மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். ஊகவணிகத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது நிலை உயரும். 14-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடம் மாறுவதும் 16-ம் தேதி முதல் குரு 6-ம் இடத்துக்கு மாறுவதும் சிறப்பாகாது. தந்தையாலும் மக்களாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானம் மாறுவதால் மனத்தில் துணிவு பிறக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். கூட்டாளிகள் ஓரளவு உதவுவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16, 18.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 7, 9. l பரிகாரம்: சூரியனையும், ராகுவையும் வழிபடுவது நல்லது. மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் 9-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்ப நலம் சீராகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிவரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். 14-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்துக்கு மாறுவதாலும் 9-ல் கேது இருப்பதாலும் உஷ்ணாதிக்கம் கூடும். தந்தை நலம் பாதிக்கும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. 16-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடத்துக்கு மாறுவதால் காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 16-ம் தேதி முதல் குரு 5-ம் இடத்துக்கு மாறுவதால் பண நடமாட்டம் அதிகரிக்கும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்கள் நலம் சீராகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16, 18.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், நீலம். l

எண்கள்: 4, 6, 8. l பரிகாரம்: விநாயகரை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நிர்வாகத்திறமை கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைத்துறையினருக்கு நலம் உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 16-ம் தேதி முதல் குரு 4-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. செய் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, பச்சை.

எண்கள்: 1, 5, 6. | பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குரு உலவுவது சிறப்பாகும். பேச்சில் திறமை வெளிப்படும். பொருளாதார நிலை உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் பல புரிவார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் அலைச்சல், உடல் நலக்குறைவு, எதிர்ப்புகள் ஆகியவை ஏற்படும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. 14-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்துக்கு மாறுவதால் அரசுதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். நிர்வாகத்திறமை வெளிப்படும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடத்துக்கும் குரு 3-க்கும் மாறுவது சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. தாய் நலனிலும் வாழ்க்கைத்துணை நலனிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16, 18.

திசை: வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம்.

எண்கள்: 1, 3, 5. l பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது. முருகனை வழிபடவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வரவேற்பு கூடப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். திறமை வீண்போகாது. நல்ல நண்பர்கள் அமைவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். 14-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. 16-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடத்துக்கு மாறுவதும் குறை ஆகும். மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் மன அமைதி கெடும். 16-ம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 18.

திசைகள்: மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 8, 9. l பரிகாரம்: துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது. ஸ்ரீ சூக்தம், மகாலட்சுமி அஷ்டகம் சொல்லி மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பாகும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் இருந்தாலும் கூட நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். உடல் நலம் சீராக இருந்துவரும். மனத்தில் துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நீங்களும் அவர்களுக்கு நலம் புரிவீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். தகவல் தொடர்பு பயன்படும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். 14-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடத்துக்கு மாறுவது குறை. வீண் அலைச்சல் ஏற்படும். சுகம் குறையும். 16-ம் தேதி முதல் குரு 11-ம் இடத்துக்கு மாறுவதால் செல்வ நிலை உயரும். மக்கள் நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12 (பகல்), 16, 18.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 6, 7, 9. l பரிகாரம்: கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.











மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். பண வரவு திருப்தி தரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல காரியங்களில் ஈடுபாடு கூடும். கலைத் துறையினருக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர் நிலை உயரப் பெறுவார்கள். உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். 14-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் குறையே ஆகும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கம் கூடும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அரசாங்கத்தாரால் பிரச்சினைகள் ஏற்படும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்துக்கு மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். குரு 10-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 18.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு. l

நிறங்கள்: நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 8. l பரிகாரம்: நாக பூஜை செய்யவும். ஆதித்தனையும், திருமாலையும் வழிபடவும்.





துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 5-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். நிர்வாகத் திறமை கூடும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பெற்றோராலும் மக்களாலும் அளவோடு நலம் உண்டாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடத்துக்கு மாறுவதால் வீண் அலைச்சல் ஏற்படும். அதனால் உடல் அசதி கூடும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்துக்கும் குரு, ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவதால் மனத்துணிவு அதிகமாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். தலை, கால் பாதம், கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. தொழில் அதிபர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 6. l பரிகாரம்: குருவை வழிபடவும். வேதம் பயின்ற அந்தணர்களுக்கு உதவி செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 10-ல் சனியும் 11-ல் சூரியனும் புதனும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். அரசியல் ஈடுபாடு பயன்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். தொலைந்த பொருள் கிடைக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடத்துக்கு மாறுவதால் உடல் நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடத்துக்கு மாறுவதால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். வீண் வம்பு கூடாது. 16-ம் தேதி முதல் குரு 9-ம் இடத்துக்கு மாறுவது நல்லது. மக்கள் நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 8. | பரிகாரம்: ராகு, கேதுவையும் விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தர்ம சிந்தனை வளரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். கேளிக்கை மற்றும் விருந்துகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பொன்னும் பொருளும் சேரும். வியாபாரம் செழிக்கும். பேச்சாற்றல் கூடும். 14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்துக்கு மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடத்துக்கும், குரு 12-ம் இடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. மக்களால் இடர்ப்பாடுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 4, 5, 6. l பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்யவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் சூரியனும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிவார்கள். செய்தொழில் விருத்தி அடையும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். முக்கியஸ்தர்களது தொடர்பு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வியாபாரம் பெருகும். 14-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடத்துக்கு மாறுவதால் எதிர்ப்புகள் அகலும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 16-ம் தேதி முதல் ஜன்ம ராசிக்கு செவ்வாயும், 8-ம் இடத்துக்குக் குருவும் மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16, 18.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 3, 4, 5, 6. l பரிகாரம்: சுப்பிரமணியரையும் விநாயகரையும் வழிபடவும்.




நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x