Published : 25 Aug 2016 12:18 PM
Last Updated : 25 Aug 2016 12:18 PM
ஒரு பயணியின் ஒட்டகம், கட்டி வைத்திருந்த கயிற்றை அறுத்துகொண்டு ஓடியது. அவருக்கு உதவுவதற்கு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் ஒட்ட கத்தை விரட்டிச் சென்றார்கள். பயந்து போன ஒட்டகம் மேலும் தலைதெறிக்க ஓடத் தொடங்கியது.
இதைக் கண்டு பதறிப்போன ஒட்டகத்தின் சொந்தக்காரர் உதவி செய்ய வந்தவர்களிடம், “இதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்று எனக்குத் தெரியும். தயவுசெய்து என்னையும், என் ஒட்டகத்தையும் விட்டுவிடுங்கள்!” என்று சொன்னார். கையில் கொஞ்சம் தீவனத்தை எடுத்துக்கொண்டு ஒட்டகத்தை அழைத்தார். ஒட்டகமும் அமைதியாக அவரிடம் வந்து சேர்ந்தது. அதன் பின் அதன் மீது ஏறி அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.
தமது தோழர்களிடம் இந்தக் கதையைச் சொல்லிய நபிகளார் கல்வியறிவற்ற முரட்டு மனிதர்களிடம் மிகவும் பொறுமையுடன் நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சாதாரணமான புல், பூண்டுகள் போன்ற தீவனத்திற்காகக் கால்நடைகள் கட்டுப்பட்டு மனிதனுக்கு பயன் தருகின்றன. அதுபோல அவரவர் தேவையறிந்து உதவி செய்து, சக மனிதர்களை மனித இனத்துக்குப் பயன்படுத்துவதும் அரும் பணியாகும் என்பதை நபிகளார் விளக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT