Published : 02 Jun 2016 04:52 PM
Last Updated : 02 Jun 2016 04:52 PM

வார ராசி பலன் 02-06-2016 முதல் 08-06-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமையும் இனிமையும் உண்டாகும். முக வசீகரம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்குப் புகழோடு பொருளும் சேரும். 8-ல் செவ்வாயும் சனியும் வக்கிரமாக இருப்பதால் எக்காரியத்திலும் யோசித்து, நிதானமாக ஈடுபடுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. 3-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5, 6, 8.

திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு. நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்

எண்கள்: 3, 6, 7.‎

பரிகாரம்: சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும்; சனியும், 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் அளவோடு வளர்ச்சி தெரியவரும். 3-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகளும் செலவுகளும் ஏற்படும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைபடும். நிர்வாகத்தினர், உத்தியோகஸ்தர்கள், கல்வித் துறையைச் சேர்ந்தவர்களுக்குச் சங்கடங்கள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 6, 8.

திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்: மகாவிஷ்ணு, சிவபெருமானை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுத்திருக்கிறார். கேது 10-ல் உலவுவதும் சிறப்பு. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. இதனால் எதிலும் விசேஷமான வளர்ச்சியைக் காண்பது அரிதாகும். வார முன்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வார நடுப்பகுதியில் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பிறரால் புகழப்படுவீர்கள். கலைத் துறை ஊக்கம் தரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. 3-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5, 6, 8.

திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு

நிறங்கள்: மெரூன்,வெண்மை,இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: சூரியன், ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் செவ்வாயும், 10-ல் புதனும், 11-ல் சூரியனும்; சுக்கிரனும் சஞ்சரிப்பது சிறப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து வரும். பலவழிகளில் ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். முக்கியப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். 3-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5,

திசைகள்:வட கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, தென் கிழக்கு,

நிறங்கள்: பொன்நிறம், ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 3, 5, 6, 9,

பரிகாரம்: விநாயகர், துர்கையை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் உலவுவது சிறப்பு. முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருந்துவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மேலதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜிதச் சொத்துகள் கிடைக்கும். 3-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரம் செழிக்கும். குடும்ப நலம் சிறக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். ஜன்ம ராசியில் குருவும், ராகுவும், 4-ல் வக்கிர செவ்வாயும்; வக்கிர சனியும், 7-ல் கேதுவும் உலவுவதால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5, 6,

திசைகள்: தென் கிழக்கு, கிழக்கு, வடக்கு, நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, இள நீலம், வெண்மை,

எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: விநாயகர், துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும்; சனியும், 6-ல் கேதுவும், 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 3-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறினாலும் நலம் புரிவார். வார முன்பகுதி சந்திராஷ்டமம் என்பதால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகும். மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். 4-ம் தேதி முதல் சந்திரனின் பலம் கூடுவதால் தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தந்தையாலும் வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். ஆன்மிகம், அறநிலையம், ஜோதிடத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5, 6, 8 ,

திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் கிழக்கு,

நிறங்கள்: பச்சை, மெரூன், இள நீலம், வெண்மை,

எண்கள்: 5, 6, 7,

பரிகாரம்: சிவபெருமானையும் பராசக்தியையும் வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x