Published : 30 Jun 2016 12:07 PM
Last Updated : 30 Jun 2016 12:07 PM

வார ராசி பலன் 30-06-2016 முதல் 06-07-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் புதனும்; சுக்கிரனும், 11-ல் குருவும்; ராகுவும் உலவுவது சிறப்பு. நல்லவர்கள் உதவுவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பொருளாதார நிலை உயரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும்.

வாரப் பின்பகுதியில் தொழில் ரீதியாக நல்ல திருப்பம் உண்டாகும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. 6-ம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 6.

திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், இள நீலம், பச்சை.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு விலகுவது நல்லது. கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

பண வரவு சீராக இருக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் 8-ல் சூரியனும் உலவுவதால் சில இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 1-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் வீண் செலவுகள் குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 2, 6.

திசைகள்: தென் மேற்கு, வடக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, வெண்சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்: ஆதித்தனை வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். உடல் நலம் சீராக இருக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும்.

கணவன்-மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. 1-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடம் மாறி, சனியோடு கூடுவது சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கனவு, தொல்லை தரும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். 6-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 2.

திசைகள்: வட மேற்கு, வட கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.

எண்கள்: 3, 7.

பரிகாரம்: பராசக்தி, மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும்; புதனும், 10-ல் செவ்வாயும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலமும் ஆதாயமும் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் நிலமையில் வளர்ச்சி காண்பார்கள். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

ஜூன் 30, ஜூலை 2, 6.

திசைகள்: மேற்கு, வடக்கு.

நிறங்கள்: கரு நீலம், சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 5, 8, 9.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கநாதரை வழிபடுவது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் சனியும் சஞ்சரிப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். பணப்புழக்கம் திருப்தி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் ஆகியோர் உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பு கூடும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.

திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும்.

நண்பர்கள், உறவினர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைஞர்கள், பெண்கள் வளர்ச்சி காண்பார்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது. என்றாலும் அவர் தன் சொந்த வீட்டில் உலவும் நிலை அமைவதால் தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களின் பிரச்சினைகள் சற்று குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.

திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு.

நிறங்கள்: பச்சை, வெண்மை, இள நீலம், புகை நிறம்.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்: குரு வழிபாடு நலம் தரும். வேத விற்பன்னர்கள், அந்தணர்களுக்கு உதவவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x