Published : 05 Feb 2015 02:24 PM
Last Updated : 05 Feb 2015 02:24 PM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். 12-ல் ராகு இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். 8-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும்.
மாணவர்கள் வெளிச்சமான சூழ்நிலையைக் காண்பார்கள். 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவதால் அசாத்தியமான துணிச்சல் ஏற்படும். எதிரிகள் உங்களைப் பார்த்து நடுங்குவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 11.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: துர்கா கவசம் படிப்பது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே:
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 9-,ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 10-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா சொல்வதும் கேட்பதும் சிறப்பாகும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும்.
எதிரிகள் அடங்கிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். 8-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் பண நடமாட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும்.
10-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடம் மாறி, கேதுவுடன் இணைவதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும். தாய் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9, 11.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சனி 11-ல் இருப்பது சிறப்பாகும். குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவைப்படும்.
8-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரிகளும் மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 10-ம் தேதி முதல் செவ்வாய் 3 ம் இடம் மாறி கேதுவுடன் கூடி குருவின் பார்வையைப் பெறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செயற்கரிய காரியங்களில் ஈடுபடவும் அவற்றில் வெற்றி காணவும் சந்தர்ப்பம் சாதகமாய் அமையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 8, 9, 11.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது. கோதண்ட ராமரை வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சனி 10-ல் இருப்பது சிறப்பாகும். புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களது திறமை வெளிப்படும்.
சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அரசாங்கத்தாராலும், தந்தையாலும் பிரச்சினைகள் சூழும். எதிலும் வேகம் கூடாது. விவேகம் அவசியமாகும். 8-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு சரிவு ஏற்படும். 10-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவதால் குடும்பத்தில் கூச்சலும் குழப்பமும் அதிகரிக்கும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். கண் உபத்திரவம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 11.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8 .
பரிகாரம்: சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. துர்கா கவசம் படிக்கவும்.
மீன ராசி வாசகர்களே:
உங்கள் ராசிநாதன் குரு 5-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மன மகிழ்ச்சி கூடும். சுப காரியங்கள் நிகழும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கும் வியாபாரிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 8-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும்.
மாணவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். 10-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறி, கேதுவுடன் இணைந்து, குருவின் பார்வையைப் பெறுவதால் ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபட்டால் அதிகம் நலம் பெறலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9 (பகல்).
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6.
பரிகாரம்: விநாயகரையும், துர்கையையும் வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT