Published : 22 Sep 2016 10:53 AM
Last Updated : 22 Sep 2016 10:53 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். பெரியவர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள் நிறைவேறும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். பண வரவு சற்று அதிகரிக்கும். நல்ல தகவல் கிடைக்கும்.
நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பிள்ளைகளால் சில இடர்பாடுகள் உண்டாகும். குரு 6-லும் சனி 8-லும் இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. உழைப்புக்குப் பின்வாங்கலாகாது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் இருந்துவரும். ஜாதகப்படி யோக பலம் உள்ள கிரகங்களின் தசை, புக்தி நடப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26, 28.
திசைகள்: கிழக்கு, வட மேற்கு. | நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 7. | பரிகாரம்: ஏழை, எளியவர்கள், வயோதிகர்களுக்கு உதவுவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் குருவும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். பணப் புழக்கம் அதிகமாகும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும்.
மாணவர்களது நினைவாற்றல் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பெயரும் புகழும் பொருளும் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையாலும், உடன்பிறந்தவர்களாலும் மன அமைதி கெடும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26, 28.
திசைகள்: வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம். | எண்கள்: 3, 5, 7.
பரிகாரம்: துர்க்கையை வழிபடவும். படித்த இளைஞர்களுக்கு உதவவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 5-ல் சுக்கிரனும், 6-ல் சனியும் உலவுவது நல்லது. வார ஆரம்பத்தில் செலவுகள் சற்று கூடும். அவை பெரும்பாலும் சுபச் செலவுகளாக அமையும். நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். வார நடுப்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். கலைஞர்கள் முன்னணிக்கு உயருவார்கள். பெண்களின் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நல்லவர்களது நட்பு நலம் சேர்க்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 28.
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, நீலம். | எண்கள்: 4, 6, 8.
பரிகாரம்: மகாவிஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சூரியனும், 4-ல் சுக்கிரனும், 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மூத்த சகோதர, சகோதரிகளால் அளவோடு நலம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்தி முறைகளைக் கையாண்டு வளர்ச்சி காண வழிபிறக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளது நிலை உயரும்.
முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். நிலபுலங்கள், வண்டி, வாகனங்கள் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். 3-ல் குருவும், 5-ல் சனியும் இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பிள்ளைகளால் மன வருத்தம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 28.
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இள நீலம், சிவப்பு | எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: கர்ப்பிணிகளுக்கும் தாய்மார்களுக்கும் உதவவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். குடும்ப நலம் சிறக்கும். பெரியவர்கள், தனவந்தர்கள் உதவுவார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
சுப காரியங்களில் பங்கு கொள்ள வாய்ப்பு உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். இதயம், மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். நல்லவர்களின் நட்புறவை வலுப்படுத்திக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 28.
திசைகள்: தென் கிழக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை, பொன் நிறம். | எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. தோற்றப்பொலிவு கூடும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். திறமை, உழைப்புக்கு உரிய பயன் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.
பெண்களின் எண்ணம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். ஆன்மிகவாதிகள் தங்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். பயணத்தின்போதும், இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26.
திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வட மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இள நீலம், மெரூன். | எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: ஏழை மாணவர்களுக்கு உதவவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT