Published : 06 Oct 2016 11:46 AM
Last Updated : 06 Oct 2016 11:46 AM

வார ராசிபலன் 06-10-2016 முதல் 12-10-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன்; 11-ல் கேது உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் சந்திரன் சனியோடு கூடி 8-ல் இருப்பதால் சிறு சங்கடம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். சுகம் குறையும். 7-ம் தேதி பிற்பகலிலிருந்து நல்ல திருப்பம் ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிய முன்வருவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். கணிதம், விஞ்ஞானம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொலைத்தூரத் தகவல் நன்மை தரும்.

அதிர்ஷ்டமான தேதி: அக்டோபர் 11.



திசைகள்: கிழக்கு, வடக்கு, வட மேற்கு, தெற்கு.



‎நிறங்கள்: மெரூன், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு.



எண்கள்: 1, 5, 7, 9.‎



பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 10-ல் கேது உலவுவது நல்லது. புதன் 5-ல் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் நலம் புரிய முன்வருவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு கூடும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதனால் மனத் தெளிவும் பிறக்கும். 7-ம் தேதி பிற்பகல் முதல் 9-ம் தேதி வரை சந்திரன் செவ்வாயுடன் கூடி 8-ல் உலவும் நிலை அமைவதால் எக்காரியத்திலும் நிதானமாக ஈடுபட்டால் விபத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். 10-ம் தேதி முதல் தான, தர்மப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபடச் சந்தர்ப்பம் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 11.



திசைகள்: வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு.



நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம்.



எண்கள்: 3, 5, 7.



பரிகாரம்: திருமுருகனை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 4-ல் புதன், 5-ல் சுக்கிரன், 6-ல் சனி உலவுவது நல்லது. பொதுப் பணிகளில் ஆர்வம் கூடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்ம் வரவேற்பு கூடும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் வளர்ச்சி காணலாம். வாரப் பின்பகுதியில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6, 7.



திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, மேற்கு.



நிறங்கள்: புகை நிறம், வெண்மை, பச்சை, நீலம்.



எண்கள்: 4, 5, 6, 8.



பரிகாரம்: முருகன், விநாயகரை வழிபடவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் உலவுவதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். தோற்றப் பொலிவு பளிச்சிடும். எடுத்தக் காரியங்களில் வெற்றி கிட்டும். முக்கியஸ்தர்கள் உதவ முன்வருவார்கள். அரசாங்கப் பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நிலபுலங்களாலும் வாகனங்களாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரவும் சந்தர்ப்பம் கூடிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது எண்ணம் ஈடேறும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். 3-ல் குருவும், 5-ல் சனியும் இருப்பதால் பிள்ளைகளால் மன அமைதி கெடும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்), 11.



திசைகள்: தென் கிழக்கு, கிழக்கு, தெற்கு.



நிறங்கள்: வெண்மை, ஆரஞ்சு, இள நீலம், சிவப்பு.



எண்கள்: 1, 6, 9.



பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது. துர்க்கை, விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதன்; குரு, 3-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பிள்ளைகளால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். எதிர்ப்புகள் குறையும். பண வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பேச்சாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரம் பெருகும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்கள் உதவ முன்வருவார்கள். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். அலைச்சல் வீண்போகாது. நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்), 11.



திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, வட கிழக்கு.



நிறங்கள்: இள நீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம்.



எண்கள்: 3, 5, 6, 9.



பரிகாரம்: நாகரை வழிபடவும். சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி புதன் ஜன்ம ராசியில் இருப்பது நல்லது. 2-ல் சுக்கிரன், 3-ல் சனி, 6-ல் கேது உலவுவது சிறப்பு. முயற்சி வீண்போகாது. பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். எதிரிகள் இருந்தாலும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள். பிள்ளைகளால் நலம் உண்டாகும். கலைஞர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் வருவாய் கிடைக்கும். விஞ்ஞானிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 6 (முற்பகல்), 7 (பிற்பகல்), 11.



திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு.



நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன், பச்சை.



எண்கள்: 5, 6, 7, 8.



பரிகாரம்: முருகனை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x