Last Updated : 27 Nov, 2014 01:15 PM

 

Published : 27 Nov 2014 01:15 PM
Last Updated : 27 Nov 2014 01:15 PM

ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய கால பூஜை

ஸ்ரீ விஷ்ணுபதி பூஜை என்பது அனைவராலும் அறியாத குறிப்பாக வைணவர்களே அறியாத, நடந்து வந்த ஒரு பாரம்பரியம் மிக்க புராதான பூஜை ஆகும். தினசரி நாள் காட்டி பஞ்சாங்கங்களிலும் இது குறித்த விவரம் இருந்தும் அறியாமலே இருந்து வருகிறோம்.

சிவன் சந்ததியில் பிரதோஷம் என்ற சிறப்பு மிக்க பூஜையைப் போல விஷ்ணு சன்னதியில் நடத்தப்படும் பூஜை இது. விஷ்ணு எனில் காக்கும் தெய்வம். பதி என்றால் பூமியில் பதிவது ஆக விஷ்ணு அவதாரங்கள் பூமியில் பதியும் நிகழ்வை ஒட்டி நடத்தப்படும் பூஜை.

தமிழ் மாதங்கள் ஆன வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாத பிறப்பை ஒட்டிய எட்டு அவதாரங்களும் அவதரித்திருக்கின்றனர். இப்படிபட்ட அவதார நிகழ்வை நினைவு கூரும் வகையில், சேலம் மாநகரில் தொடர்ந்து 3௦-வது ஆண்டாக சிறப்பான வகையில் சேலம் மாநகர விஷ்ணு சன்னதியில் விஷ்ணுபதி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறாக ஜெய வருடம் கார்த்திகை 1- ம் தேதி விஷு புண்ணிய காலத்தில் சேலம் செவ்வாய்பேட்டையில் அஷ்டலக்ஷ்மி சமேத லக்ஷ்மி நாராயண சன்னதியில்  விஸ்வக்சேனர்,  சூக்தம், புருஷ சூக்தம் வாஸ்து, சந்தான கோபாலன், லக்ஷ்மி குபேர பூஜை, சுயம் வரா பார்வதி ஹயக்கிரிவர், ம்ருத்யுஞ்ஜெயர் பூஜை மற்றும் ஹோமங்களுடன் மகா பூர்ணாகுதி மற்றும் திருமஞ்சன நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. ஆதரவற்றோருக்கு வஸ்திர தானமும் பங்கேற்ற சுமார் 4,000 பக்தர்களுக்கு உணவுப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x