Published : 09 Jun 2016 11:08 AM
Last Updated : 09 Jun 2016 11:08 AM

வார ராசி பலன் 09-06-2016 முதல் 15-06-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் சுகமும் சந்தோஷமும் கூடும். உற்றார்-உறவினர்களால் நலம் உண்டாகும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலை உயரும். பேச்சில் திறமை வெளிப்படும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். குடும்ப நலம் சிறக்கும்.

உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறுவதாலும் புதனுடன் பரிவர்த்தனை பெறுவதாலும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு பயன்படும். 15-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 14, 15.

திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட மேற்கு, வட கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7.‎

பரிகாரம்: துர்கையை வழிபடுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே இருப்பது நல்லது. 10-ல் உள்ள கேது நலம் புரிவார். வார முன்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வார நடுப்பகுதியில் புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள்.

அலைச்சல் அதிகமாகும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடம் மாறுவதும் சிறப்பு. வாரம் முழுவதும் கலைத் துறையினருக்குச் சிறப்பாக அமையும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும்.

கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். 15-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 11, 14, 15.

திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இள நீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: ஆதித்தன், துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. குடும்ப நலம் சிறக்கும். பண வரவு சற்று கூடும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடி வரும். 3-ல் குருவும், 9-ல் கேதுவும், 12-ல் சூரியனும், புதனும் உலவுவதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. தந்தை நலம் பாதிக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

13-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 15-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. உஷ்ண சம்பந்தமான நோய் நொடிகள் ஏற்படும். கண் உபத்திரவம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 14, 15.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: கறுப்பு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: மகா விஷ்ணு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கடல் சார்ந்த பொருட்கள் லாபம் தரும். வெண்மையான பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பொருளாதார நிலையில் விசேஷமான அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கடன் தொல்லை குறையும்.

பேச்சில் திறமை பளிச்சிடும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் ஆகியோருக்குச் செழிப்புக் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடம் மாறுவது நல்லது. வாழ்க்கை வசதிகள் பெருக வாய்ப்பு உண்டாகும். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவதால் உடல்நலனில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 14, 15.

திசைகள்: வட கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை, இள நீலம்.

எண்கள்: 1, 3, 5, 6, 9.

பரிகாரம்: துர்கையை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் உலவுவது சிறப்பு. புதன், சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுவதால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசுப் பணியாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். அலைச்சல் சற்று கூடவே செய்யும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 15-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடம் மாறுவதால் முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் நலம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 14, 15.

திசைகள்: தென் கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, இள நீலம், வெண்மை.

எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. புதன் 9-ல் உலவினாலும் நலம் புரிவார். மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். ஜோதிடர்களது வாக்கு பலிக்கும். தொலைதூரப் பயணம் பயன்படும். 12-ல் குருவும் ராகுவும் இருப்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. பயணம் சார்ந்த இனங்களால் சங்கடம் உண்டாகும். கனவுத் தொல்லை ஏற்படும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் நலம் ஏற்படும். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 14, 15.

திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், இள நீலம், வெண்மை.

எண்கள்: 5, 6, 7.

பரி காரம்: துர்கை, தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x