Published : 15 Sep 2016 11:22 AM
Last Updated : 15 Sep 2016 11:22 AM

வார ராசிபலன் 15-09-2016 முதல் 21-09-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 11-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடத்திற்கு மாறுவது குறை. 19-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது விசேடமாகும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். விளையாட்டு, விநோதங்களிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். நூதன பொருட்சேர்க்கை நிகழும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18, 19.



திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.



நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, இளநீலம், சிவப்பு.



எண்கள்: 1, 4, 5, 6, 9.



பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி வாழ்த்துக்களைப் பெறவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடத்திற்கு மாறுவது வரவேற்கத்தக்கது. 19-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறினாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். புதிய பதவி, பட்டங்கள் பெற வாய்ப்பு கூடிவரும். அரசுதவி கிடைக்கும். நிறுவனம், நிர்வாகம், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம் பெருகும். பொன்னும் பொருளும் சேரும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18, 19.



திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.



நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.



எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.



பரிகாரம்: ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் கேது உலவுவது நல்லது. சூரியனும் புதனும் 9-ல் இருப்பது நலம் தரும். 17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ம் இடங்களைப் பார்ப்பது நல்லது. குடும்ப நலம் சீராக இருந்துவரும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். பிரச்சினைகள் எளிதில் தீரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். 19-ம் தேதி முதல் கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட மனந்திருந்தி உதவுவார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். வாழ்க்கை வசதிகள் பெருகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18, 19.



திசைகள்: வடமேற்கு, கிழக்கு.



நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.



எண்கள்: 1, 5, 7.



பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடத்திற்கு மாறுவது குறை. 19-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடத்திற்கு மாறினாலும் நலம் புரிவார். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப நலம் சீராகும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். திறமை வீண்போகாது. பொதுநலப்பணிகளில் ஆர்வம் கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியமும் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். அதிர்ஷ்ட வகையில் லாபம் உண்டு. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தாரால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18, 19.



திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.



நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.



எண்கள்: 3, 5, 6, 8.



பரிகாரம்: சுப்பிரமணியரையும் நாக தேவதைகளையும் வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை. 19-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பநலம் சீராகவே இருந்துவரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நல்ல தகவல் வந்து சேரும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். நிலபுலங்கள் சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18, 19.



திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.



நிறங்கள்: சிவப்பு, நீலம்.



எண்கள்: 6, 8, 9.



பரிகாரம்: நாகரை வழிபடவும். ஏழை அந்தணர்களுக்கு உதவி செய்யவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகாது. 19-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்ல தகவல் வந்து சேரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் வருவாய் கிடைத்துவரும். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உத்தியோகஸ்தர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் 19-ம் தேதி முதல் பிரச்சினைகள் விலகி, வெளிச்சமான பாதை புலப்படும்.



அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 18, 19.



திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.



நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு.



எண்கள்: 1, 3, 4, 5, 9.



பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x