Published : 14 Jul 2016 12:17 PM
Last Updated : 14 Jul 2016 12:17 PM

வார ராசி பலன் 14-07-2016 முதல் 20-07-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். 16-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரப் பெறுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திரவப் பொருட்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். 2-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15, 20.

திசைகள்: வட கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. சரஸ்வதி தேவியை வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். இடமாற்றம் உண்டாகும். கலைத் துறையினருக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். பயணத்தால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் இருப்பதால் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். தலை சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. வாரப் பின்பகுதியில் பண வரவு சற்றுக் கூடும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். கணவன் மனைவி உறவு நிலை சீர்பெறும். 16-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடம் மாறுவதால் தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 15, 20.

திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இள நீலம், வெண்சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்:

சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் சில இப்போது நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் உதவுவார்கள். நற்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். கலைத் துறை ஊக்கம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 12-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழிலாளர்களும் விவசாயிகளும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். இயந்திரப் பணியாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வாரப் பின்பகுதியில் நல்ல திருப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 20.

திசைகள்: வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம், ஹனுமன் சாலீஸா படிப்பது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிப் பந்தயங்களிலும், வழக்கு வியாஜ்ஜியங்களிலும் வெற்றி காண சந்தர்ப்பம் கூடிவரும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் சுபிட்சம் கூடும். நண்பர்கள் நலம் புரிவார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவராலும் மக்களாலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் உண்டாகும். பிற மொழி, மதக்காரர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 16-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடம் மாறுவதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15, 20.

திசைகள்: மேற்கு, தெற்கு.

நிறங்கள்: கருநீலம், சிவப்பு.

எண்கள்: 1, 8, 9.

பரிகாரம்: குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். பொருளாதார நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் சுகம் குறையும். பெற்றோரால் சில இடர்பாடுகள் ஏற்படும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15.

திசைகள்: வடக்கு, வட கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 5, 8, 9.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. 16-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடம் மாறுவது குறை. வார முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். காரியத்தில் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மக்களால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தொழிலில் அதிக கவனம் செலுத்திவருவது நல்லது. வாரப் பின்பகுதி முன்பகுதியைவிடச் சிறப்பாக அமையும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களாலும் மனைவியாலும் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 15, 20.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இள நீலம், புகை நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: குரு, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x