Published : 15 Sep 2016 01:21 PM
Last Updated : 15 Sep 2016 01:21 PM

பஞ்சமந்திரம் ஓதிய பார்சுவநாதர்

சமண சமய நெறிகளைப் பரப்பியவர்களில் பகவான் பார்சுவநாதருக்கு மிகுந்த பங்குண்டு. அவர் இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் ஆவார்.

காசி நாட்டை விசுவசேனன் எனும் அரசன் ஆண்டுவந்தார். அவர் மனைவி பிராமி, ஒரு நாள் அதிசயக் கனவு கண்டாள். தனக்கு ஒரு தெய்வீகக் குழந்தை பிறக்கப் போகிறதென்று உணர்ந்தாள். அவர் கண்ட கனவுப்படி அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பார்சுவநாதசுவாமி எனப் பெயரிட்டனர்.

பார்சுவநாதர் வாலிபப் பருவமடைந்தார். ஒரு நாள் தன் நண்பர்களுடன் விளையாடச் சென்றார். அவர் செல்லும்போது துறவி ஒருவர் நெருப்பு வளையத்தின் நடுவே தவம் பூண்டிருந்தார். அவர் மகிலாபுரத்தை ஆண்ட அரசன் மதிபாலன். தன் மனைவி இறந்த வருத்தத்தில் துறவியானவர் அவர். பார்சுவநாதரின் தாய்ப்பாட்டன். அவரைக் கவனியாது சென்ற பேரன் மீது கோபம் கொண்டு தீயைப் பெரிதுபடுத்த ஒரு மரத்தை வெட்டச் சென்றார்.

அதனைக் கண்ட பார்சுவநாதர் அம்மரத்தின் பொந்தில் இரு பாம்புகள் வசிப்பதாகவும், மரத்தை வெட்ட வேண்டாமென்றும் தாத்தாவிற்கு அறிவுறித்தினார். அதை மதியாத மதிபாலன் மரத்தை வெட்ட, பாம்புகள் இரண்டும் அடிபட்டன. அதனைக் கண்ட பார்சுவநாதர் பரிவுடன் அப்பாம்புகளுக்குப் பஞ்சமந்திரம் எனும் மாமந்திரத்தை உபதேசித்தருளினார். அப்புனித மந்திரத்தைக் கேட்ட பாம்புகள் இறந்து பின் தரணேந்திரனாகவும் பத்மாவதியுமாகப் பிறந்தனர்.

அறுபத்தொன்பது ஆண்டுகள் அறம் பரப்பிய பார்சுவநாதர், சம்மேதகிரி உச்சியில் சுக்கிலத்தியானம் ஏற்று அனைத்து வினைகளும் நீங்க, ஆவணி மாதம் சுக்கிலபட்சம் சப்தமி விசாக நட்சத்திரம் அதிகாலை முக்திப் பேறு பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x