Published : 30 Mar 2017 10:26 AM
Last Updated : 30 Mar 2017 10:26 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜன்ம ராசியில் வலுப்பெற்றிருக்கிறார். குரு 6-ல் வக்கிரமாக இருப்பது நல்லது. சுக்கிரன் 12-ல் இருப்பதும் கோசாரப்படி சிறப்பாகும். உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகவே இருந்துவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். நூதனப் பொருட்சேர்க்கை நிகழும். பேச்சாற்றல் அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். சூரியன் 12-ல் இருப்பதாலும் 5-ல் ராகு உலவுவதாலும் மக்களாலும் தந்தையாலும் பிரச்சினைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 5.
திசைகள்: தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை. l எண்கள்: 3, 6, 7, 9.
பரிகாரம்: சூரியனையும், சனியையும் வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றமும், நிலைமாற்றமும் உண்டாகும். வீடு மாற்றம் செய்ய வேண்டிவரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் செலவுகள் உண்டாகும். மன அமைதியும் கெடும். ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமானவர்களின் தொடர்பு பயன்படும்.
உடல் நலம் சீராகும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். கலைஞர்கள், மாதர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகிகளுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 2, 5.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 1, 3, 6, 7. l பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அனுகூலமாக சஞ்சரிப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். அரசுதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். மனத்தில் துணிவுகூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நிலை உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
எழுத்து, பத்திரிகை துறைகளில் வளர்ச்சி இருக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். போட்டி, பந்தயம், விளையாட்டு, வழக்கு ஆகியவற்றில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பொதுநலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2 (இரவு), 5.
திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6, 8, 9. l பரிகாரம்: கணபதியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் வக்கிர சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் புதனும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும்.
புதிய சொத்துக்களும் சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களது வாழ்விலும் நன்மைகள் கூடும். தகவல் தொடர்பு வகையில் வருவாய் அதிகரிக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 5.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, இளநீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 9. l பரிகாரம்: நாக பூஜை செய்யவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும் 9-ல் தன் சொந்த வீட்டில் செவ்வாயும் உலவுவது நல்லது. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். குடும்ப நலம் திருப்தி தரும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும்.
ராசிநாதன் சூரியன் 8-ல் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். அரசு சம்பந்தமான காரியங்களில் கவனம் தேவை. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். ராகு, கேது, சனி ஆகியோரின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளவும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3, 9. l பரிகாரம்: பார்வை இழந்தவர்களுக்கு உதவி செய்யவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது நல்லது. வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். சந்திரன் 8-ல் செவ்வாய், புதன் ஆகியோருடன் கூடியிருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். இயந்திரங்களில் பணிபுரியும்போதும், பயணத்தின்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு தேவை.
உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். 1-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலாளர்களது நோக்கம் நிறைவேறும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் காரியத்தில் வெற்றி கிட்டும். மதிப்பு உயரும். எதிர்பாராத பொருள்வரவு உண்ட்சாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 2, 5.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.
எண்கள்: 5, 7, 8. l பரிகாரம்: சுப்பிரமணியரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT